அமைச்சர் ஆதவ் அர்ஜுனா - டெய்சி விவாகரத்து
daisy martin announce divorce from minister aadhav arjuna: அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக அவரது மனைவி டெய்சி அறிவித்துள்ளார்.
ஆதவ் அர்ஜுனா - டெய்சி விவாகரத்து
தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக உள்ளவர் ஆதவ் அர்ஜூனா.

இவர் லொட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டின் மற்றும் லால்குடி சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டின் தம்பதியின் மகள் டெய்சி என்பவரை 2012 ஆம் ஆண்டில் காதல் திருமணம் செய்திருந்தார்.
Arise Investments நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக செயல்பட்டு வரும் டெய்சியின் சொத்து மதிப்பு, ரூ.162.14 கோடி என ஆதவ் அர்ஜுனா 2026 தேர்தல் பிராமண பத்திரத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், தனது கணவர் ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக அவரது மனைவி டெய்சி மார்ட்டின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 14 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் இணைந்து பயணித்த நாங்கள், அன்பு, புரிதல் மற்றும் மாற்றங்கள் நிறைந்த பல கட்டங்களைக் கடந்து வந்துள்ளோம். நண்பர்களாகவும், வாழ்க்கைத்துணைகளாகவும், பெற்றோர்களாகவும் இணைந்து வாழ்ந்தோம்.
இன்று, ஆதவ் அர்ஜுனாவும் நானும் ஒரு தம்பதியாகப் பிரிந்து, தனித்தனிப் பாதைகளில் பயணிக்க முடிவெடுத்துள்ளோம். இது எங்கள் இருவருக்கும் ஒரு புதிய தொடக்கமாக இருந்தாலும், எங்கள் குழந்தையை இணைந்து வளர்ப்பதிலும், குழந்தையின் மகிழ்ச்சியையும் நலனையும் உறுதி செய்வதிலும் நாங்கள் தொடர்ந்து மிகுந்த முன்னுரிமை அளிப்போம்.
ஆதவ் அர்ஜுனாவின் மீது எனக்கு எப்போதும் மரியாதை உண்டு. அவர் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளிலும் அவருக்கு மகிழ்ச்சியும், அமைதியும், வெற்றியும் கிடைக்க மனதார வாழ்த்துகிறேன்.
இந்த மாற்றமான காலகட்டத்தில், உங்கள் புரிதலையும், கனிவையும், எங்கள் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பளித்து ஒத்துழைப்பையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் முதல்வர் விஜய்யிடம் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்த அவரது மனைவி சங்கீதா பின்னர் அதனை திரும்ப பெற்ற நிலையில், மூத்த அமைச்சரான ஆதவ் அர்ஜுனாவின் மனைவி பிரிவதாக அறிவித்துள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.