இப்படி ஸ்கூல் பையன் மாதிரியா விளாடுறது? CSK வீரரை வெளுத்து வாங்கிய டேல் ஸ்டைன்
ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்கெதிரான ஆட்டத்தில் விளையாடிய சுரேஷ் ரெய்னாவை ஸ்கூல் பையன் போன்று அவருடைய ஆட்டம் இருந்ததாக, தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைன் கூறியுள்ளார்.
மும்பை அணிக்கெதிரான நேற்றைய போட்டியில், சென்னை அணியின் நட்சத்திர வீரரான சுரேஷ் ரெய்னா 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இவர் மும்பை அணியின் வேகப்பந்து வீச்சாளரான Adam Milne பந்தை அடிக்க நினைத்து, பேட் உடைந்தது மட்டுமின்றி கேட்ச் கொடுத்து அவுட்டாகினார்.
இதற்கு முந்தைய ஷாட்டிலும் சுரேஷ் ரெய்னா இது போன்ற ஷாட் ஆட முற்பட்டு, அது எட்ஜில் பட்டு சென்றது. ஆனால் அடுத்த பந்தே அதே போன்ற ஷாட் அடித்து அவுட் ஆனது, ரசிகர்களை கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
இது குறித்து தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான் டேல் ஸ்டைன் கூறுகையில், சுரேஷ் ரெய்னா கிரிஸ் உள்ளே வந்ததில் இருந்தே, மிகவும் அசெளரியமாக இருந்தார்.
இதன் காரணமாக அவர் சில வித்தியாசமாக ஆட முயற்சித்தார். அவரின் இந்த ஆட்டத்தை பார்த்த போது, ஒரு ஸ்கூல் கிரிக்கெட் மாணவனைப் போன்று இருந்தது.
ஒரு சர்வதேச வீரரா இப்படி விளையாடுகிறார் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை, அவரின் பேட் உடைந்து வெளியேறியதை பார்த்த போது, சங்கட்டமாக இருந்தது. அது ஒரு வேளை சிக்ஸருக்கு சென்றிருந்தால், இதைப் பற்றி நான் சொல்லாமல் இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.
மேலும், மும்பை இந்தியன்ஸின் வேகப்பந்து வீச்சாளர்களான டிரண்ட் போல்ட் மற்றும் ஆடம் மில்னே இருவரையும் டொனால்ட் பாராட்டினார். அவர்களின் பந்து வீச்சு சென்னை அணியை நிலைகுலைய செய்யும் வகையில் இருந்தது.
இருப்பினும் ருத்ராஜ் கெய்ட்வாட்டின் ஆட்டம் அது அனைத்தையும் வீணாக்கிவிட்டது. இது சரியான பந்துவீச்சு, டெஸ்ட் போட்டிகளுக்கு வீசப்படுவது போன்று சிறப்பாக வீசினார்கள் என்று கூறினார்.