நடுவானில் நெருப்பு கோளமான இரு விமானங்கள்: துயரத்தில் முடிந்த சாகச நிகழ்ச்சி
அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இரண்டாம் உலக போர் காலத்தின் விமானங்கள் அடங்கிய சாகச நிகழ்ச்சியில் நடுவானில் இரு விமானங்கள் மோதி நெருப்பு கோளமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரத்திலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இரண்டாம் உலக போர் காலத்தின் விமானங்கள் அடங்கிய சாகச நிகழ்ச்சியானது டல்லாஸ் நகரில் முன்னெடுக்கப்பட்டது.
Credit: AP
எதிர்பாராத நொடியில்
இதில், போயிங் பி-17 குண்டுகள் வீசும் விமானம் ஒன்றும் சிறிய ரக பெல் பி-63 கிங்கோப்ரா என்ற விமானமும் விண்ணில் பறந்த நிலையில் எதிர்பாராத நொடியில் மோதிக்கொண்டுள்ளது.
பார்வையாளர்கள் மொத்தமும் வாய்விட்டு அலற, பலர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இந்த கோர விபத்தில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
Credit: AP
ஆனால் இந்த தகவலை இதுவரை நிர்வாகிகள் சார்பில் எவரும் உறுதி செய்யவில்லை என்றே தெரிய வந்துள்ளது. இரண்டு விமானங்களும் துண்டுகளாக உடைந்து சிதறின.
தொடர்ந்து நெருப்பு கோளமாகவே தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. மட்டுமின்றி, போயிங் பி-17 விமானமானது அந்த விபத்தில் இரண்டாக பிளந்துள்ளதாகவே தெரிய வந்துள்ளது.
Credit: AP