லண்டனில் கேரளத்து சிறுமி தாக்கப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்... ஏற்க மறுத்த நபர்
கிழக்கு லண்டனில் உணவகம் ஒன்றில் 9 வயது சிறுமி துப்பாக்கியால் சுடப்பட்ட வழக்கில், முக்கிய குற்றவாளி கொலை முயற்சி குற்றச்சாட்டை ஒப்புக்கொள்ள மறுப்பு.
நிரந்தரமாக பாதிக்கப்படும்
குறித்த சம்பவத்தில் 9 வயது சிறுமியுடன் மேலும் மூவர் காயங்களுடன் தப்பியிருந்தனர். ஆனால் 9 வயது சிறுமி மட்டும் படுகாயமடைந்தார். சிறுமியும் அவரது குடும்பத்தினரும் டால்ஸ்டன் பகுதியில் அமைந்துள்ள துருக்கிய உணவகமான Evin Cafe-வில் உணவருந்தி வந்தனர்.
கடந்த மே 29ம் திகதி நடந்த இச்சம்பவத்தில், உள்ளூர் நேரப்படி இரவு இரவு 9.20 மணியளவில் திடீரென்று மோட்டார்சைக்கிளில் வந்த நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் தொடர்புடைய சிறுமி படுகாயமடைந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டு, தற்போது குணமடைந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது பேசும் மற்றும் நகரும் திறன் நிரந்தரமாக பாதிக்கப்படும் என்றே குடும்பத்தினர் கவலை தெரிவித்துள்ளனர்.
பாடசாலை விடுமுறையை குடும்பத்தினருடன் கொண்டாடும் வகையில் குறித்த சிறுமி இந்தியாவின் கேரளாவில் இருந்து லண்டன் வந்திருந்தார். இனி அவர் பழைய நிலைக்கு திரும்புவாரா என்பது குறித்து தங்களுக்கு கவலை இருப்பதாகவே குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
துருக்கி சட்டவிரோத குழுக்களுக்கு
சம்பவத்தின் போது Evin Cafe உணவகத்திற்கு வெளியே மூவர் அமர்ந்திருந்துள்ளனர். அந்த நபர்களையே குறிவைத்து துப்பாக்கியால் சுட்டுள்ளார். அவர்கள் காயங்களுடன் தப்பிய நிலையில், மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் சில நாட்களில் வீடு திரும்பியுள்ளனர்.
அவர்கள் பெயர் உள்ளிட்ட தகவல்களை இந்த வாரம் நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. ஆனால் சிறுமியின் பெயர் உள்ளிட்ட தகவல்களை வெளியிட நீதிமன்றம் மறுத்துள்ளது.
துப்பாக்கியால் சுட்டவர் ஒருவர் மட்டுமே என பொலிசார் நம்புகின்றனர். மேலும், அந்த மோட்டார்சைக்கிள் 2021ல் திருடப்பட்டது என்றும் பொலிசார் கூறுகின்றனர். மட்டுமின்றி, இந்த தாக்குதலுக்கு பின்னணியில் துருக்கி சட்டவிரோத குழுக்களுக்கு தொடர்புள்ளதா என்பது குறித்தும் விசாரணை முன்னெடுத்துள்ளனர்.
இந்த நிலையில் ஆகஸ்டு 9ம் திகதி 32 வயதான Javon Riley என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால் அவர் மீதான நான்கு குற்றச்சாட்டுகளையும் அவர் நீதிமன்றத்தில் மறுத்துள்ளார் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |