9 விக்கெட்டுகள் வீழ்த்திய வனிந்து ஹசரங்கா! சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றிய தம்புல்லா
இலங்கை தேசிய சூப்பர் லீக் தொடரில் தம்புல்லா அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் காலேவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
முன்னிலை வகித்த தம்புல்லா
காலேவில் நடந்த நான்கு நாட்கள் டெஸ்டில் தம்புல்லா மற்றும் காலே அணிகள் மோதின. முதலில் இன்னிங்சில் தம்புல்லா 248 ஓட்டங்களும், காலே 187 ஓட்டங்களும் எடுத்தன.
தம்புல்லா அணி வீரர் வனிந்து ஹசரங்கா அபாரமாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் இரண்டாவது இன்னிங்சில் தம்புல்லா அணி 196 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. சோனல் 59 ஓட்டங்களும், ரணிதா 45 ஓட்டங்களும் எடுத்தனர்.
Team Dambulla beat Galle by 75 runs in the finals and clinch the #NSL23 4-day tournament title! ???
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) March 5, 2023
Scorecard: https://t.co/REdXoi5QHy pic.twitter.com/CiKmcLL7yB
மாயாஜாலம் காட்டிய ஹசரங்கா
அதனைத் தொடர்ந்து 258 ஓட்டங்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய காலே அணி, ஹசரங்காவின் துல்லியமான பந்துவீச்சில் 182 ஓட்டங்களுக்கு சுருண்டது.
What a brilliant performance by Wanindu Hasaranga, who finishes with 9 wickets for the match ?
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) March 5, 2023
Scorecard: https://t.co/REdXoi5QHy#NSL23 pic.twitter.com/oFxQvHsNug
இதன்மூலம் தம்புல்லா அணி 75 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வனிந்து ஹசரங்கா இந்த டெஸ்டில் மொத்தம் 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் தம்புல்லா அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. அந்த அணிக்கு ஐந்து மில்லியன் வழங்கப்பட்டது.
Congratulations to Team Dambulla | #NSL23 4-day Tournament Champions ? pic.twitter.com/Q9RHf1ldmG
— Sri Lanka Cricket ?? (@OfficialSLC) March 5, 2023