அப்பாவை பார்த்ததும் ஆடுகளத்தில் ஓடிவந்த குழந்தை! இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு பேசிய வீரர்..நெகிழ்ச்சி வீடியோ
பிக்பாஷ் லீக் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணி வீரர் டேன் கிறிஸ்டியன், தனது குழந்தையை தூக்கி வைத்துக் கொண்டு வெற்றி குறித்து பேசிய நிகழ்வு ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
டேன் கிறிஸ்டியன்
சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் ஆல்ரவுண்டர் வீரரான டேன் கிறிஸ்டியன் விளையாடி வருகிறார்.
நேற்று நடந்த போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சிட்னி தண்டர்ஸ் அணியை வீழ்த்தியது.
தந்தையிடம் ஓடிவந்த குழந்தை
போட்டிக்கு பின்னர் டேன் கிறிஸ்டியனனை நோக்கி அவரது குழந்தை ஆடுகளத்தில் ஓடி வந்தது. அதனை வாஞ்சையுடன் தூக்கிய கிறிஸ்டியன், தனது இடுப்பில் வைத்துக் கொண்டு ஊடகத்திடம் போட்டி குறித்து பேசினார்.
We're still sad that @danchristian54's pulling up stumps after #BBL12, but he still has a few chances to add more sparkle to his illustrious career ?✨ pic.twitter.com/V6Y5eyQ0oz
— KFC Big Bash League (@BBL) January 21, 2023
அப்போது அவரது குழந்தை அமைதியாக காட்டிய முகபாவனைகள் காண்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேலும், குழந்தையை வைத்துக் கொண்டு பேசிய கிறிஸ்டியனின் செயல் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.