அரைகுறை ஆடையுடன் பெண்கள் ஆபாச நடனம்! U19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் சர்ச்சை
19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் பெண்கள் அரைகுறை ஆடையுடன் நடனமாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இறுதிப் போட்டியில் இந்திய அணியும், இங்கிலாந்து அணியும் மோதிய நிலையில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.
மைதானத்திற்கு வந்த பார்வையாளர்களை குஷிப்படுத்துவதற்காக ஐ.சி.சி. சிறப்பான ஏற்பாடு செய்து இருந்தது. மேற்கிந்திய தீவுகளில் மிகவும் பிரபலமானது கலிப்சோ நடனம்.
இதில் பெண்கள் அரைகுறை ஆடைகளை அணிந்து இடுப்பை மட்டும் ஆட்டி வினோத நடனமாடுவது அந்த நாட்டின் கலாச்சாரம் ஆகும். இதனால், இறுதிப் போட்டிக்காக கலிப்சோ நடனமாடும் பெண்களை ஐ.சி.சி நியமித்துள்ளது.
அண்டர் 19 வீரர்கள் பவுண்டரி விளாசும் போதும், விக்கெட் எடுக்கும் போதும் இந்த பெண்கள் அரைகுறை உடையுடன் ஆபாச நடனமாடினர்.
இதனை தொலைக்காட்சியில் தொடர்ந்து காட்டப்பட்டது.
இது காண்போர் பலரை முகம் சுளிக்க வைத்தது.