பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் காலமானார்! கடும் சோகத்தை வெளிப்படுத்திய சோனுசூட்
பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் கொரோனாவால் உயிருக்கு போராடி வந்த நிலையில், அவர் சற்று முன்பு உயிரிழந்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுகில் முன்னணி நடன இயக்குநராக வலம் வந்தவர் சிவசங்கர். இவர் தமிழில் திருடா திருடி', மகதீரா, பாகுபலி உள்ளிட்ட பல படங்களில் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
மகதீரா படத்தில் ஒரு பாடலுக்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. இதைத் தவிர தமிழில் கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு,தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவர், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிவசங்கருடன் அவரது மனைவி, மூத்த மகன் ஆகியோருக்கும் தொற்று உறுதிசெய்யப்பட்டதால், அவர்களுக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சிவசங்கர் மாஸ்டர் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
Heartbroken to hear about the demise of Shiv Shankar masterji. Tried our best to save him but God had different plans. Will always miss you masterji.
— sonu sood (@SonuSood) November 28, 2021
May almighty give strength to the family to bear this loss.
Cinema will always miss u sir 💔 pic.twitter.com/YIIIEtcpvK
சிவசங்கரின் சிகிச்சைக்கு சோனு சூட், தனுஷ் உள்ளிட்ட நடிகர்கள் உதவினர். சற்று முன்பு, சிவசங்கர் மாஸ்டர் சிகிச்சை பலனின்றி மருத்துவனமையில் காலமானார். இதை அறிந்த நடிகர் சோனு சூட் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நாம் அவரை காப்பாற்ற நினைத்தோம், ஆனால் கடவுள் வேறு திட்டத்தை வைத்திருந்துள்ளார். இந்த திரையுலகம் நிச்சயம் உங்களை மிஸ் செய்யும் என்று கடும் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
சிவசங்கர் மாஸ்டர் உடல்நிலை சரியில்லாமல் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த போது, முதல் நடிகராக சோனு சூட் உதவியை அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் முருகேசு இராமலிங்கம்
புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, Holstebro, Denmark
19 May, 2017
மரண அறிவித்தல்
திருமதி பஞ்சாட்சரதேவி அருமைத்துரை
சரவணை, யாழ்ப்பாணம், ஹல்துமுல்ல, London, United Kingdom
18 May, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் வல்லிபுரம் கனகசபாபதி
கரவெட்டி கிழக்கு, தெற்கிலுப்பைகுளம், Greenford, United Kingdom
21 May, 2018
மரண அறிவித்தல்
திருமதி சுந்தரேஸ்வரி இரத்தினகோபால்
கொக்குவில், கொழும்பு, Duisburg, Germany, Leverkusen, Germany
13 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி கமலாதேவி கோபாலகிருஷ்ணன்
பருத்தித்துறை, London, United Kingdom, Nigeria, Toronto, Canada
14 May, 2022