ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தை.. 39 வயதில் தன்னை விட 9 வயது குறைந்த நபரை திருமணம் செய்து கொண்ட பிரபலம்!
பிரபல நடன இயக்குனர் ஃபாராகான் என்பவர் 39 வயதில் திருமணம் செய்து கொண்டு ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தை பெற்றுள்ளது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
மும்பை பகுதியில் வசித்து வருபவர் ஃபாராகான். இவர் 1992ஆம் ஆண்டு சினிமாவில் நடன இயக்குனராக அறிமுகமானார்.
சினிமாவில் தனது ஒவ்வொரு பாடலிலும் வித்தியாசமான நடனத்தை அமைத்து இன்றுவரை ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் இருக்கானா இடுப்பிருக்கானா என்கின்ற பாடலுக்கு நடனம் அமைத்தது குறிப்பிடத்தக்கது.
தற்போது பாலிவுட்டில் பிரபல நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார். இதையடுத்து ஏராளமான சினிமா படங்களில் பணியாற்றிய இவர் 39 வயதில் தன்னைவிட 9 வயது குறைந்த இளம் இயக்குநர் சிரிஷ் குந்தரை கடந்த 2004ஆம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் இவருக்கு கடந்த 2008ஆம் ஆண்டு ஒரே பிரசவத்தில் 3 குழந்தை பிறந்தது. ஒரு மகன், இரு மகள்கள் என ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றது குறித்து சினிமா வட்டாரம் முழுவதும் பரவலாக இன்றுவரை பேசபட்டு வருகின்றது.