கனடாவில் பாடசாலை காலம்... என்ன நடந்தது? வாயைத் திறக்க மறுக்கும் கமலா ஹாரிஸ்
கனடாவில் வாழ்ந்த 5 ஆண்டுகள் தொடர்பில் கமலா ஹாரிஸ் இதுவரை வெளிப்படையாக எதுவும் பதிவு செய்ததில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
கனடாவுக்கு குடிபெயர்வது என்பது
கனடாவில் வாழ்ந்த காலம் கமலா ஹாரிஸ் நடனத்தில் ஆர்வம் காட்டினார் என்றும், பெண்கள் மட்டுமேயான ஒரு நடனக் குழு ஒன்றையும் அவர் ஒருங்கிணைத்தார் என்றும் கூறுகின்றனர்.
பலராலும் விரும்பப்பட்ட ஒரு நபராகவே கமலா ஹாரிஸ் இருந்துள்ளார். கலிபோர்னியாவில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்வது என்பது கமலா ஹாரிஸால் தாங்க முடியாத ஒன்றாக இருந்துள்ளது.
ஆனால் விவாகரத்தான தாயார் ஷ்யாமளா McGill பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் மற்றும் ஆராய்ச்சி பணிக்கு தெரிவாகவே, 1977ல் சகோதரி மாயா மற்றும் ஹாரிஸ் ஆகியோர் மாண்ட்ரீல் பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
கனடாவில் தமது கல்வி உட்பட எதைப் பற்றியும் கமலா ஹாரிஸ் தனது 2019 நினைவுக் குறிப்பில் பதிவு செய்யவில்லை. அவர் தனது வாழ்க்கையின் இந்த காலகட்டத்தைப் பற்றி வெறும் எட்டு பத்திகள் மட்டுமே எழுதியிருந்தார்.
தாங்கள் குடியிருந்த வீட்டு முற்றத்தில் கால்பந்து விளையாட வீட்டு உரிமையாளர் தடை செய்திருந்த நிலையில், தமது சகோதரி மாயாவுடன் இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்து, வீட்டு உரிமையாளரின் கொள்கையை மாற்ற வைத்தவர் கமலா ஹாரிஸ்.
மோசமான ஒரு நெருக்கடியில்
7ம் வகுப்பு படிக்கும் போதே நாடக வகுப்புகள் மற்றும் வயலின், பிரெஞ்ச் ஹார்ன், கெட்டில் டிரம் ஆகிய இசைக்கருவிகளையும் அவர் கற்றார். 9ல் இருந்து 11ம் வகுப்பு வரையில் வெஸ்ட்மவுண்ட் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றுள்ளார்.
இங்கு தான் Midnight Magic என்ற பெண்கள் மட்டுமான நடனக் குழு ஒன்றை கமலா ஹாரிஸ் ஒருங்கிணைத்துள்ளார். தற்போது 60 வயதாகும் Wanda Kagan கமலா ஹாரிஸின் மிக நெருக்கமான உயர்நிலைப் பள்ளி தோழிகளில் ஒருவர்.
மிக மோசமான ஒரு நெருக்கடியில் இருந்து கமலா ஹாரிஸ் தம்மை காப்பாற்றி, தங்களுடன் வசிக்கும் ஏற்பாடுகளை அவர் செய்ததாக நினைவு கூர்ந்துள்ளார். மட்டுமின்றி, கமலா ஹாரிஸின் தாயாரும் தம்மை அவரது மகள் போலவே கவனித்துக் கொண்டதாகவும் Wanda Kagan தெரிவித்துள்ளார்.
கமலா ஹாரிஸ் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் ஒருமுறை அவரை சந்தித்துக் கொண்டதையும் Wanda Kagan நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |