விளையாட்டு வினையானது... காதலன் கைகளால் படுக்கையில் மரணமடைந்த காதலி: பின்னர் நடந்த துயரம்
உறவின் போது காதலன் கைகளால் காதலி மரணமடைய, அதை தாங்கிக்கொள்ள முடியாமல் காதலனும் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாக
கடந்த 2022ல் நடந்த இச்சம்பவம் தொடர்பில் நீதிமன்ற விசாரணை முன்னெடுக்கப்பட்டதில் உண்மை வெளியாகியுள்ளது. 26 வயதான நடனக் கலைஞர் Georgia May Brooke என்பவரே உறவின் போது கழுத்தை நெரித்ததில் மரணமடைந்துள்ளார்.
2022 பிப்ரவரி மாதம் நடந்த இச்சம்பவத்தின் போது Georgia May Brooke மற்றும் அவரது காதலன் 31 வயதான Luke Cannon ஆகிய இருவரும் போதை மருந்து, மது என பயன்படுத்திவிட்டு, உறவில் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் இருவரும் திட்டமிட்டே மூர்க்கத்தனமாக நடந்து கொண்டதாகவும், ஒருகட்டத்தில் Luke Cannon கைகளால் அவரது காதலி மரணமடைந்துள்ளார் என்றும் விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது.
அவசர மருத்துவ உதவிக்குழுவினர் தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த போது, படுக்கையில் ஆடைகள் ஏதுமின்றி சலனமற்று காணப்பட்டுள்ளார். அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்ற நிலையில், அவர் மரணமடைந்துள்ளதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
உறுதியான எந்த ஆதாரங்களும்
இதனிடையே நடந்த சம்பவத்தால் அதிர்ச்சிக்குள்ளான Luke Cannon நண்பருக்கு தகவல் தெரிவித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். பொலிஸ் விசாரணையில் Luke Cannon கொலை குற்றவாளி என அடையாளப்படுத்தப்பட்டாலும், இருவரும் திட்டமிட்டே உறவில் ஈடுபடும் முன்னர் போதை மருந்தை பயன்படுத்தியுள்ளதாகவும் தெரிய வந்தது.
இதில் Luke Cannon தமது காதலியின் கழுத்தை நெரித்ததில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர். மேலும், Luke Cannon கொலை செய்ததாக உறுதியான எந்த ஆதாரங்களும் சிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
இதனையடுத்து இது சட்டத்திற்கு புறம்பான கொலை என்றே நீதிமன்றத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |