ஜிப்லைன் சவாரியில் திடீரென கழன்ற பாதுகாப்பு பூட்டு: 40 அடி உயரத்தில் இருந்து சுற்றுலா பயணி: வீடியோ
ஜிப்லைன் சாகச விளையாட்டின் போது ஏற்பட்ட விபத்தில் கர்நாடகாவை சேர்ந்த நபர் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.
ஜிப்லைன் விபத்து
டான்டேலி ரிசார்ட் ஒன்றில் ஜிப்லைன் சவாரியின் போது பாதுகாப்பு சாதனம் பழுதடைந்ததால் 40 அடி உயரத்தில் இருந்து சுற்றுலா பயணி ஒருவர் கீழே விழுந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விஜயபுராவை சேர்ந்த குபேர் சுர்பூர்(Kuber Surpur) என்ற நபர் ஜிப்லைன் சவாரியை தொடங்கிய சில நொடிகளில் அவரது பாதுகாப்பு பூட்டு திடீரென கழன்று விழுந்தது.
இதனால் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்த குபேர் சுர்பூர் பலத்த காயமடைந்துள்ளார்.
📍Karnataka | #Watch: A tourist from Vijayapura sustained severe injuries after allegedly falling nearly 40 feet during a zipline ride at a resort in Dandeli after the safety lock reportedly failed mid-ride. pic.twitter.com/AdZJUeur3K
— NDTV (@ndtv) July 20, 2026
அவருக்கு கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பதுடன், நரம்பு பாதிப்புகளும் ஏற்பட்டு இருப்பதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பந்தப்பட்ட ரிசார்ட்டில் இருந்த உபகரணங்கள் துருப்பிடித்தும், முறையாக பராமரிக்கப்படாமலும் இருந்ததாக குபேரின் குடும்பத்தினர் ரிசார்ட் நிர்வாகத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

விபத்தில் பாதிக்கப்பட்ட குபேர் முதலில் டான்டேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், பின்னர் மேல் சிகிச்சைக்காக மிராஜ் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவி பலரது கண்டனங்களையும் பெற்று வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |