பொடுகு பிரச்சனையா? இதிலிருந்து எளிதில் விடுபட இதோ சில சூப்பரான டிப்ஸ்
கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக அரிப்பு ஏற்படும்.
தலை பொடுகு மிகவும் எரிச்சலூட்டும் முடி பிரச்சினைகளில் ஒன்றாக இருக்கிறது.
ஊட்டச்சத்துக் குறைபாடு முதல் நம்முடைய உடலில் உள்ள சில நோய் அறிகுறிகள், நாம் பயன்படுத்தும் ரசாயனங்கள் கலந்த பொருட்கள் என முடியில் பொடுகு வர பல காரணங்கள் இருக்கின்றன. இதனை எளியமுறையில் கூட போக்கலாம். தற்போது அவற்றை பார்ப்போம்.
Image - thehansindia
- 8 சிறிய வெங்காயம், ஒரு ஸ்பூன் காற்றாழை ஜெல் மற்றும் வல்லாரை பொடி ஒரு ஸ்பூன் ஆகியவற்றை மிக்சியில் பேஸ்ட்டு போல் அரைத்து அதனை தலையில் அப்ளை செய்ய வேண்டும். சிறிது நேரம் கழித்து நன்கு அலச வேண்டும். இதனை வாரம் ஒரு முறை ட்ரை செய்தால் பொடுகுப் பிரச்சனை தீரும்.
- எலுமிச்சைச் சாறு, தேங்காய் எண்ணெய் இரண்டிலும் தலா இரண்டு டேபிள்ஸ்பூன் எடுத்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை தலைமுடியில் மசாஜ் செய்வதுபோலத் தேய்த்து, 20 நிமிடங்கள் வரை ஊறவைக்க வேண்டும். பிறகு ஷாம்பூ தேய்த்து, தலையை அலச வேண்டும். தேங்காய் எண்ணெய், முடிக்கு ஊட்டமளிக்கும். எலுமிச்சைச் சாறு பொடுகுத் தொல்லையை நீக்கி, முடி வளர்ச்சிக்கு உதவும்.
- தயிரைத் தலையில் நன்றாகத் தேய்த்துக்கொள்ள வேண்டும். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, சிறிது ஷாம்பூ போட்டுக் குளிக்கலாம். தயிர், உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; முடிக்கு பளபளப்பையும் தரும். சைனஸ், ஒற்றைத் தலைவலி வரும் பிரச்னை இருப்பவர்கள், இதைத் தவிர்க்கவும்.
- இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை ஊறவைக்கவும். மறுநாள் அதை அரைத்துக்கொள்ளவும். இதை தலையில் தேய்த்து, அரை மணி நேரம் ஊறவைத்து தலைக்குக் குளிக்கவும். இது உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; முடி வளர்ச்சிக்கு உதவுவதோடு பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
- வெங்காயத்தை அரைத்து தலையில் தடவி, 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும். பிறகு தலைக்குக் குளித்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.