ஆமிர்கான் மகளாக நடித்த 19 வயது நடிகை அதிர்ச்சி மரணம்!
தங்கல் பட நடிகை சுஹானி பட்னாகர் தனது 19 வயது உயிரிழந்தது திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தங்கல் நடிகை
ஆமிர்கான் நடிப்பில் 2016ஆம் ஆண்டில் வெளியாகி பாரிய வெற்றி பெற்ற திரைப்படம் ''தங்கல்''.
இப்படத்தில் ஆமிர்கானின் மகளாக குழந்தை நட்சத்திர கதாபாத்திரத்தில் நடித்தவர் சுஹானி பட்னாகர்.
இவருக்கு விபத்து ஒன்றில் கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக பல மருத்துவ சிக்கல்களை சுஹானி சந்தித்ததாக ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.
இந்த நிலையில் கடந்த 7ஆம் திகதி சுஹானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர் சிகிச்சையில் இருந்த அவர் நேற்று உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது திரையுலகினரை அதிர்ச்சியிலும், சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
அதிர்ச்சி மரணம்
சுஹானியின் இறப்பு குறித்து ஆமிர்கானின் புரொடக்ஷன் தனது ட்விட்டரில், 'எங்கள் சுஹானி காலமானதைக் கேட்டு நாங்கள் மிகவும் வருத்தப்படுகிறோம். அவரது தாயார் பூஜா-ஜிக்கும், குடும்பத்தினர் அனைவருக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்.
அத்தகைய திறமையான இளம் பெண், அத்தகைய அணி வீரர் சுஹானி இல்லாமல் தங்கல் முழுமையடையாது. சுஹானி நீங்கள் எப்போதும் எங்கள் இதயங்களில் ஒரு நட்சத்திரமாக இருப்பீர்கள். நீங்கள் நிம்மதியாக ஓய்வெடுங்கள்' என தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |