இதைப் படித்தால் இனிமேல் வெள்ளை சர்க்கரை சாப்பிடவே மாட்டீங்க! இத்தனை ரசாயனமா?
வெள்ளை சர்க்கரை அல்லது சீனி என்றால் யாருக்கும் கசக்கவா செய்யும், அந்தளவுக்கு வெள்ளை சர்க்கரை பிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால் அது கசப்பான மற்றும் அதிர்ச்சிகரமான உண்மைகள் மறைந்துள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?
ஆம் வெள்ளை சர்க்கரையை தொடர்ந்து அதிகமாக சாப்பிடும் போது பல உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.
காரணம் அதில் கலக்கப்படும் ரசாயனங்கள், முதலில் இந்த சர்க்கரை எப்படி தயாராகிறது என தெரிந்து கொள்ளலாம்.
வெள்ளை சர்க்கரை எப்படி தயாராகிறது?
கரும்பிலிருந்து சாறு பிழியும் போது பிளிச்சிங் பவுடர் அல்லது குளோரின் ரசாயனம் பயன்படுத்தப்படுகிறது, பிழிந்த சாறில் லிட்டருக்கு 200 மிலி வீதம் பாஸ்போரிக் அமிலம் கலந்து, 70 சென்டிகிரேட் அளவு சூடாக்கப்படுகிறது.
இந்த அமிலம் அழுக்கு நீக்கியாக பயன்படுகிறது, பின் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து சல்பர் டை ஆக்சைடு செலுத்துகின்றனர்.
இதை கொதிகலனில் அதிக வெப்பநிலையில் சூடாக்கும் போது, மண், சக்கை போன்ற கசடுகள் பிரிந்து, தெளிந்த கரும்பு சாறு கிடைக்கிறது, ஆனால் அது சத்துக்களை இழந்துவிடுகிறது.
அந்த சாறில் காஸ்டிக் சோடா, வாஷிங் சோடா கலந்து கொதிகலனில் அடர்த்தியாக்கப்படுகிறது, அதில் சல்பர் டை ஆக்சைடு மற்றும் சோடியம் ஹைட்ரோ சல்பேட் போன்ற ரசாயனங்களை சேர்க்கின்றனர், அப்போது படிக நிலையில் வெள்ளை சர்க்கரை உருவாகிறது.
ஆபத்துக்கள் என்னென்ன?
இந்த செயற்கை இனிப்பும் அதிக தேவையற்ற கலோரிகளும் இணைந்த சர்க்கரை அதிகமாக உடலில் சேரும்போது கெட்ட கொழுப்பாக மாறி உடல் பருமனை ஏற்படுத்துவதோடு கணையத்தில் சுரக்கும் இன்சுலின் அளவையும் குறைக்கிறது.
அதனால் இரத்தத்தில் சர்க்கரைஅளவு அதிகரித்து நீரிழிவு நோயை உண்டாக்கிவிடும் முக்கிய காரணியாகவும் இருக்கிறது என்பதை மருத்துவர்களும் உறுதிப்படுத்துகிறார்கள்.
நீரிழிவைத் தொடர்ந்து, வலுவான எலும்பை உறுதியிழக்கச் செய்யும். குறிப்பாக பெண்களை அதிகம் தாக்கும் ஆஸ்டியோபொராசிஸ், உடல் பருமன், இதய நோய், கண் பார்வைக் குறைபாடு, கீல்வாதம், பற்கள் பாதிப்பு இப்படி அச்சுறுத்தும் நோய்கள் வரிசையாக நம்மை தாக்கத் தொடங்குகின்றன.
அளவுக்கு அதிகமானால் அமிர்தமே நஞ்சாகும்போது நஞ்சுக்களின் கலவையால் உருவான சர்க்கரை, அதிக பாதிப்புகளைக் குறைந்த வயதிலேயே ஏற்படுத்தி விடுகிறது என்கிற கசப்பான உண்மையை உணரவேண்டிய தருணம் இதுவே!!!