பூமியை நோக்கி வரும் அபயகரமான சிறுகோள்! எச்சரிக்கை விடுத்துள்ள நாசா
வரும் மார்ச் 21 ஆம் தேதி அன்று பூமியை ஒரு மிகப்பெரிய சிறுகோள் ஒன்று கடக்க இருப்பதாக நாசா தகவல் வெளியிட்டுள்ளது.
பூமியை கடக்கும் இந்த சிறு கோள் பூமியை மீது உரசினாலோ அல்லது பூமியின் மேல் விழுந்தாலோ மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தும் என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இந்த சிறுகோள் வினாடிக்கு 21 மைல் (34.4 கி.மீ) வேகத்தில் நகரும் என்றும் சிறுகோள் 2001 FO32 இன் விட்டம் 1 கிலோமீட்டர் உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வு குறிப்பிட்ட தினத்தன்று இரவு 9:33 மணிக்கு நடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் மார்ச் 21 அன்று தோன்றிய பின்னர், இந்தச் சிறுகோள் அடுத்ததாக 31 ஆண்டுகளுக்குப் பிறகு மார்ச் 22, 2052 அன்று பூமியைக் கடந்து செல்லும் என்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.