1000 டன் வெடிக்கும் பொருள்..!ரஷ்யாவின் மிதக்கும் வெடிகுண்டு பிரித்தானிய துறைமுகத்தில் நிறுத்தி வைப்பு
வெடிக்கும் சாத்தியம் கொண்ட ஆயிரக்கணக்கான டன் அம்மோனியம் நைட்ரேட் வைத்திருக்கும் கப்பல் பிரித்தானியாவின் நார்ஃபோக்கில் உள்ள கிரேட் யார்மவுத் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மால்டா கொடியுடன் பயணிக்கும் MV ரூபி கப்பல், ஆகஸ்ட் மாத இறுதியில் ரஷ்யாவின் கண்டலாக்சா துறைமுகத்தில் இருந்து கனாரி தீவுகளின் லாஸ் பால்மாஸுக்கு பயணித்தது.
ஆனால், பயணத்தின் போது கப்பலுக்கு சேதம் ஏற்பட்டதால், பாதுகாப்பான துறைமுகத்தைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு, கப்பல் பிரித்தானியா நீரில் தங்க அனுமதி வழங்கப்பட்டது.
ஆரம்பத்தில் பிரித்தானியாவின் பிராந்திய நீரின் வெளியே நங்கூரமிடப்பட்டிருந்த கப்பல், பின்னர் மோசமான காலநிலை காரணமாக கரையோரத்திற்கு நெருக்கமாக நகர்த்தப்பட்டுள்ளது.
Herne Bay மற்றும் Sandwich பகுதியின் எம்.பி Sir Roger Gale, ரஷ்யா மீதான தடைகளுக்கு மத்தியில் அம்மோனியம் நைட்ரேட் கார்கோ உடன் தொடர்புடைய சாத்தியமான அபாயங்கள் குறித்து கவலை தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் கிரேட் யார்மவுத் துறைமுகம், ஆபத்தான பொருட்களை கையாளும் திறன் கொண்டது மற்றும் அம்மோனியம் நைட்ரேட்டை மற்றொரு கப்பலுக்கு பாதுகாப்பாக மாற்றுவதற்கு கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றப்படுகிறது என கிரேட் யார்மவுத் துறைமுகம் உறுதிப்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |