ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தினால் உடனே இதை செய்யுங்கள்! இல்லேன்னா உங்கள் தகவல் திருடப்படும்
உலகளவில் தொழில்நுட்பம் உச்சம் தொட்டு கொண்டிருந்தாலும் அதை வைத்து சிலர் பாதகமான செயல்களை செய்து ஏராளமான பணம் சம்பாதித்து வருகின்றனர்.
அதில் ஒன்று தான் டிஜிட்டல் வைரஸ்கள், அந்த வகையை சேர்ந்த ஜோக்கர் வைரஸ் மிக ஆபத்தானதாக உள்ளது. இது உங்களின் ஆண்ட்ராய்டு மொபைலில் உள்ள ஆண்ட்ராய்டு செயலிகளில் நேரடியாக ஊடுருவி உங்களுடைய முக்கிய மெசேஜ்கள், ஓடிபி, பாஸ்வேர்டு, ஸ்மார்ட்போன் பற்றிய பிற தகவல்கள் ஆகியவற்றை உங்களுக்கு தெரியாமலே எடுத்துவிடும்.
இந்த வருட ஜுலையில் ஜோக்கர் வைரஸ் சிலரின் ஸ்மார்ட்போன் செயலிகளில் இருப்பதாக கண்டறிந்தனர். அப்போதே அந்த செயலிகளை கூகிள் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி விட்டனர்.
மீண்டும் இந்த ஜோக்கர் வைரஸ் சில குறிப்பிட்ட 14 செயலிகளில் ஒளிந்திருப்பதாக, காஸ்பர்ஸ்கி லேப்ஸின் ஆண்ட்ராய்டு மால்வேர் ஆய்வாளர் டாட்டியானா ஷிஷ்கோவா என்பவர் தற்போது தெரிவித்துள்ளார்.
அதன்படி இந்த 14 செயலிகள் இருந்தால் அதை உடனே அன் இன்ஸ்டால் செய்வது நல்லது.
1. ஸ்மார்ட் டிவி ரிமோட் ஆப்
2. ஈஸி பிடிஎஃப் ஸ்கேனர் ஆப்
3. வால்யூம் பூஸ்டர் லவ்டர் சவுண்ட் ஈகுவலைசர்
4. ஃபிளாஷ்லைட் ஃபிளாஷ் அலர்ட் ஆன் கால்
5. வால்யூம் பூஸ்டரிங் ஹியரிங் எயிட்
6. பேட்டரி சார்ஜிங் அனிமேஷன் பப்பில் எஃபெக்ட்
7. நவ் QR கோடு ஸ்கேன்
8. சூப்பர்-கிளிக் விபிஎன்
9. பேட்டரி சார்ஜிங் அனிமேஷன் வால்பேப்பர்
10. கிளாசிக் எமோஜி கீபோர்டு
11. டாஸ்லிங் கீபோர்டு
12. எமோஜி ஒன் கீபோர்டு
13. ஹாலோவீன் கலரிங்
14. சூப்பர் ஹீரோ எஃபெக்ட் .