வீட்டருகில் வந்த கடுமையான விஷம் கொண்ட கொம்பேறி மூக்கன் பாம்பு! அடிக்க வேண்டாம் என கணவனை தடுத்த மனைவி... பின்னர் நடந்த சம்பவம்
தமிழகத்தில் வீட்டுக்குள் புகுந்த கொம்பேறி மூக்கன் பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள ஒரு வீட்டின் பின்புறம் வளர்ந்திருந்த மரக்கிளையில் கொம்பேறி மூக்கன் பாம்பு நகர்ந்து சென்றதை அந்த வீட்டின் உரிமையாளர் பார்த்தார்.
கம்பை எடுத்து அவர் பாம்பை அடிக்க முயன்ற போது அவரின் மனைவி வேண்டாம் என தடுத்து நிறுத்தினார். இதையடுத்து பாம்பு அங்கிருந்து நழுவி அருகிலிருந்த வீட்டுக்குள் புகுந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து தீயணைப்பு துறையினர் அங்கு வந்து கடுமையான விஷம் கொண்ட கொம்பேறி மூக்கன் பாம்பை மிகவும் கஷ்டப்பட்டு தாங்கள் கொண்டு வந்த கருவியால் பிடித்தனர்.
அதை அவர்கள் வெளியில் கொண்டு வந்த போது சுற்றியிருந்த மக்கள் இதுவரை பார்த்திராத கொடிய பாம்பை முதல் முறையாக கண்டு அச்சமடைந்தனர்.
பின்னர் அந்த பாம்பானது வனப்பகுதியின் உள்பக்கத்தில் விடப்பட்டது.