இரவு உறக்கத்தில் இடையில் கண் விழித்தால் ஆபத்து ஏற்படுமா?
பொதுவாக நம்மில் சிலருக்கு இரவு தூக்கத்தில் திடீரென கண் விழிப்பது வழக்கம். அதே நேரத்தில் இரவு தூக்கத்தின் போது இடையில் கண் விழிப்பு ஏற்பட்டால் அது மிகவும் ஆபத்தானது என்று கூறப்படுகின்றது.
ஏனெனில் இரவில் மட்டுமே சுரக்கும் மெலடோனின் என்ற வேதிப்பொருள் இரவில் கண் விழித்தால் சுரக்காது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மூளையில் உள்ள பினியல் சுரப்பி சுரக்கும் போது, இந்த மெலடோனின், சுரக்காமல் போனால் நம் உடலின் ஒட்டு மொத்த ஆரோக்கியமும் கெட்டுப் போகும்.
அதோடு மட்டுமில்லாமல், நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, அனைத்து நோய்களின் பாதிப்புகள் ஏற்படும். அந்தவகையில் தற்போது இரவு உறக்கத்தில் இடையில் கண் விழித்தால் ஏற்படும் ஆபத்துக்கள் என்ன என்பதை பார்ப்போம்.
இரவில் கண் விழிப்பதால் ஏற்படும் பாதிப்புகள்?
-
இரவில் கண் விழிப்பதால் நம் உடலில் ஓய்வாக உள்ள கல்லீரலில் ஆரோக்கியம் பாதிப்படையும்.
-
கண்கள் மற்றும் சிறுநீரகத்தின் ஆரோக்கியம், இரவு நேர தூக்கம் தொலைப்பதால் கடுமையான பாதிப்பை அடையும்.
-
பகலில் உறங்குவதுடன், சரியான உணவு எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் அல்சர், செரிமானப் பிரச்சினை ஆகிய நோய்கள் ஏற்பட தொடங்கும்.
-
நரம்புத் தளர்ச்சி, தோல் சுருக்கம், மன அழுத்தம், எதிர்மறையான எண்ணங்கள், ஆண்மைக் குறைவு, கல்லீரல் பிரச்னை ஆகிய நோய்களின் தீவிரம் அதிகமாகும்.