ஆவணங்கள் சேதம்... 67 ஆண்டுகள் தண்டனை பெற்ற பிரித்தானியர் விடுதலை: அவரின் கொடூர பின்னணி
ஆத்திரத்தில் மனைவியை கொடூரமாக கொலை செய்து, உடலை சூட்கேஸ் ஒன்றில் அடைத்து, புதைத்துள்ளார்.
ஆவணங்கள் சேதமானதாக கூறி, மேல்முறையீடு செய்ய முடியாது என வாதிட்டு, விடுதலை பெற்றுள்ளார்
கரீபியன் தீவான கிரெனடாவில் மனைவியை கொன்று புதைத்த வழக்கில் 67 ஆண்டுகள் தண்டிக்கப்பட்ட பிரித்தானியர், வெறும் 8 ஆண்டுகளில் விடுதலையாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது 40 வயதாகும் அலெக்சாண்டர் கிளாக் என்பவரே, நீதிமன்றத்தில் ஆவணங்கள் சேதமான காரணத்தை குறிப்பிட்டு விடுதலை பெற்றவர்.
@seecaption
இவர், தனது குழந்தையை கவனித்து வந்த 17 வயது இளம்பெண்ணுடன் முறை தவறிய தொடர்பு வைத்திருந்ததை மனைவிக்கு தெரிய வந்ததை அடுத்து, அந்த ஆத்திரத்தில் மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்து, உடலை சூட்கேஸ் ஒன்றில் அடைத்து, புதைத்துள்ளார்.
லண்டனில் சிறை அதிகாரியாக பணியாற்றியுள்ள அலெக்சாண்டர் கிளாக் 2014 ஜூன் மாதம் தமது மனைவியான Nixiann Downes-Clack என்பவரை கொலை செய்துள்ளார். இவரது சடலம் சம்பவம் நடந்து ஐந்து நாட்களுக்கு பின்னர் கண்டெடுக்கப்பட்டது.
இதனையடுத்து 2016 பிப்ரவரி மாதம் இவருக்கு 67 ஆண்டுகள் மற்றும் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் தற்போது, நீதிமன்றத்தில் ஆவணங்கள் சேதமானதாக கூறி, மேல்முறையீடு செய்ய முடியாது என வாதிட்டு, விடுதலை பெற்றுள்ளார் அலெக்சாண்டர் கிளாக்.
குறித்த தகவலை அறிந்த Nixiann உறவினர்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஒரு கொடூர குற்றவாளியை திரைப்பட பாணியில் விடுவித்திருப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
@seecaption
லண்டனில் சிறை அதிகாரியாக பணியாற்றும் காலகட்டத்திலும், அலெக்சாண்டர் கிளாக் பல வன்முறை சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார் என ஆவருக்கு நெருக்கமான சிலர் தற்போது நினைவுகூர்ந்துள்ளனர்.
காதல் திருமணம் செய்து கொண்ட கிளாக் மற்றும் Nixiann தம்பதி 2009ல் கரீபியன் தீவான கிரெனடாவில் குடிபெயர்ந்துள்ளனர். 2011 டிசம்பரில் இந்த தம்பதிக்கு மகள் பிறந்துள்ளார்.
இருவருமே வேலைக்கு செல்வதால், குழந்தையை கவனிக்க 17 வயதான இளம்பெண் ஒருவரை பணிக்கு அமர்த்தியுள்ளனர். இந்த நிலையில், குறித்த இளம்பெண்ணை ஆசைவார்த்தை கூறி தமது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார் கிளாக்.
இந்த விவகாரம் பின்னர் Nixiann-வுக்கு தெரியவர, கொலையில் முடிந்ததாக நீதிமன்ற விசாரணையில் வெளியாகியுள்ளது.
தற்போது, 8 ஆண்டுகள் சிறை தண்டனைக்கு பின்னர் கிளாக் பிரித்தானியா திரும்ப இருக்கிறார் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.