AI இனால் நிகழவிருக்கும் ஆபத்துக்கள்! ஆச்சரியப்பட வைக்கும் உண்மை!
ஒரு புள்ளி விவரத்தின் அடிப்படையில் AI காரணமாக உலகில் 300 மில்லியன் மக்கள் வேலை இழப்பார்கள் என்று கூறப்படுகிறது.
வளர்ந்து வரும் AI தொழில்நுட்பத்தின் காரணமாக மக்களின் தனியுரிமை பெரும் அளவில் பாதிக்கப்படும்.
அத்தோடு பலரது தனிப்பட்ட விவரங்கள் AI மூலம் திருடப்படலாம்.
மேலும் ஒருவரின் விவரத்தை வைத்து அவரை போலவே AI பேசவும் எழுதவும் வைக்க முடியும் என புள்ளி விவரத்தில்மூலம் பரபரப்பான உண்மைகள் சில வெளியாகியுள்ளன.
AI என்றால் என்ன?
செயற்கை நுண்ணறிவு (AI-Artificial Intelligence ) என்பது இயந்திரங்களின் நுண்ணறிவு மற்றும் இதனை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட கணினி அறிவியலின் ஒரு பிரிவாகும்.
பெரும்பாலான AI பற்றிய விளக்கங்கள் இதனை நுண்ணறிவுக் கருவிகளைப் பற்றிப் படித்தல் மற்றும் வடிவமைத்தல்" என வரையறுக்கின்றன.
இதில் நுண்ணறிவுக் கருவி அதாவது AI என்பது, தன் சூழ்நிலையை உணர்ந்து அதிக வெற்றி வாய்ப்புகளுக்குத் தக்கவாறு செயலில் ஈடுபடும் ஓர் அமைப்பாகும்.
ஜான் மேக்கர்த்தி என்பவர் 1956 இல் இந்தச் சொல்லை அறிமுகப்படுத்தி இதனை "நுண்ணறிவு இயந்திரங்களை உருவாக்கும் அறிவியல் மற்றும் பொறியியல்" என வரையறுத்தார்.
தானாகவே சிந்தித்து செயற்படும் AI!
தானாகவே சிந்திக்கும் திறன் உள்ள அவைகளால் மனிதர்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும்.
இதற்கு சிறந்த உதாரணம் ChatGPT என குறிப்பிடுகின்றனர்.
நாம் குறிப்பிட்ட ஒரு விவரத்தை உள்ளிட்டால் தானாகவே அதை ஆராய்ந்து நமக்கு வேண்டிய பதிலை மனிதர்களை போலவே அது அளிக்கும்.
AI இனால் ஏற்படப்போகும் சில தீமைகளை பற்றி இப்போது பார்க்கலாம்!
நம்பகத்தன்மையற்ற தகவல்கள் அதாவது AI கூறும் அனைத்து தகவல்களும் உண்மை என கூறிவிட முடியாது.
சிலவை பொய்யாக கூட இருக்கலாம்.
ஆகவே அதிலிருந்து நமக்கு கிடைக்கப்பெறும் தகவல்களானது 100 வீதம் உண்மை என உறுதிப்படுத்தமுடியாது.
AI மூலம் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்க முடியும் இதனால் பல பொய்யான தகவல்கள் இதன் மூலம் பரவ வாய்ப்புள்ளது.
வேலை இழப்பு விகிதம் அதிகரிக்கும்!
இந்த AI னால் ஏற்படப்போகும் மிக முக்கிய பிரச்சனை என்னவென்றால் அது வேலையின்மை பிரச்சினை அதிகரிக்கும்.
ஏற்கனவே இயந்திரங்கள் காரணமாக மனிதர்களுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்து கொண்டிருக்கும் நிலையில் மேலும் IT போன்ற துறைகளில் வேலை செய்பவர்கள் இதனால் அதிகளவு வேலையிழக்க நேரிடும்.
தகவல்களுக்கான பாதுகாப்பு தன்மை குறையும்!
AI இனால் இலகுவாக உங்கள் தகவல்களை சேமிக்கமுடியும்.
மேலும் AI யிடம் உள்ள விசேட திறமை என்னவெனில் அதனால் நம்மைப்போல பேசவும் எழுதவும் முடியும்.
ஆகையால் இதனால் நிறைய போலித்தன்மையான விடயங்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது.
போர் நடக்க வாய்ப்புகள் உள்ளது!
உலகிலுள்ள ஒரு சில நாட்டு ராணுவங்கள் AI மூலம் இயங்கும் விமானங்கள், ஆயுதங்கள், வாகனங்கள், டிரோன் போன்றவற்றை பயன்படுத்துகிறார்கள்.
இந்த AI மூலம் தன்னிச்சையாக செயற்படமுடியும் ஆகையால்இவை மனிதர்களின் கட்டுப்பாட்டு மீறி நடக்கவும் வாய்ப்புகள் உள்ளது.