இரவு விடுதியில் அத்துமீறிய பிரபல கால்பந்து நட்சத்திரம்: பிணை மறுத்த வெளிநாட்டு நீதிமன்றம்
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் விளையாடிய பிரபல பிரேசில் கால்பந்து நட்சத்திரம் தற்போது ஸ்பெயின் நாட்டில் விசாரணைக் கைதியாக உள்ளார்.
பெண்ணிடம் அத்துமீறிய டானி ஆல்வ்ஸ்
பார்சிலோனா நகரில் அமைந்துள்ள இரவு விடுதி ஒன்றில் பெண்ணிடம் அத்துமீறியதாக புகார் அளிக்கப்பட்ட நிலையிலேயே பிரேசில் கால்பந்து நட்சத்திரம் டானி ஆல்வ்ஸ் பொலிசாரிடம் சிக்கியுள்ளார்.
@getty
2022 டிசம்பர் 30ம் திகதி குறித்த சம்பவம் நடந்ததாக தொடர்புடைய பெண் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து ஸ்பெயின் பொலிசாரால் டானி ஆல்வ்ஸ் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
விசாரணையின் போது, அத்துமீறல் நடந்ததாக கூறப்படும் பிரபலமான இரவு விடுதியில் தாம் இருந்ததாக டானி ஆல்வ்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால், தாம் தவறேதும் செய்யவில்லை என்றே டானி ஆல்வ்ஸ் நீதிபதியிடம் கூறியுள்ளார்.
ஸ்பெயின் நாட்டின் விதிகளின் அடிப்படையிலேயே டானி ஆல்வ்ஸ் கைதாகியுள்ளார். மேலும், தமக்கு அந்த பெண்மணியை தெரியாது எனவும், அவரை தனது வாழ்க்கையில் சந்தித்ததே இல்லை எனவும், அவரது பெயர் கூட தெரியாது எனவும் டானி ஆல்வ்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
Credit: Google Maps
இந்த நிலையில், தற்போது அவருக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளதுடன், விரிவான விசாரணைக்கு பின்னர் நீதிபதி முடிவு செய்வார் என்றே கூறுகின்றனர். உள்ளூர் பத்திரிகையில் டானி ஆல்வ்ஸ் தொடர்பிலும், இரவு விடுதியில் என்ன நடந்தது என்பதையும் விரிவான தகவலாக வெளியிட்டுள்ளனர்.
அத்துமீறியதற்கான காணொளி
டானி ஆல்வ்ஸ் அத்துமீறியதற்கான காணொளியும் வெளியாகியுள்ளது. தொடர்புடைய பெண்ணை கழிவறை வரையில் டானி ஆல்வ்ஸ் மற்றும் நண்பர் ஒருவர் பின் தொடர்ந்ததும் அதில் பதிவாகியுள்ளது.
மேலும் சம்பவத்திற்கு பின்னர் தமது நண்பருடன் டானி ஆல்வ்ஸ் அந்த இடத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இதனிடையே, பாதிக்கப்பட்ட பெண் அழுதபடி வெளியேறவும், அவரது தோழிகள் உடனே இரவு விடுதி பாதுகாவலர்களுக்கு தகவல் தெரிவிக்கவும், அவர்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
Credit: Google Maps
பொலிசார் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதுடன், தொடர்புடைய பெண்ணின் புகாரை அடுத்து டானி ஆல்வ்ஸ் கைது செய்யப்பட்டார்.
39 வயதான டானி ஆல்வ்ஸ் தற்போது மெக்சிகோ அணிக்காக விளையாடி வருகிறார். கத்தாரில் நடந்த கால்பந்து உலகக் கோப்பை விளையாட்டுகளிலும் டானி ஆல்வ்ஸ் பிரேசில் அணிக்காக களமிறங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.