சர்வதேச குற்றக் கும்பலின் தலைவன் டப்ளினுக்கு நாடு கடத்தல்: யார் இந்த டேனியல் கினஹான்?

United Kingdom Crime Ireland
By Thiru Aug 09, 2026 10:10 PM GMT
Report

அயர்லாந்திற்கு நாடு கடத்தப்பட்ட சர்வதேச குற்ற கும்பலின் தலைவனான டேனியல் கினஹான்(Daniel Kinahan) டப்ளின் சிறப்பு கிரிமினல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.

டேனியல் கினஹான் நீதிமன்றத்தில் ஆஜர்

அயர்லாந்து ராணுவத்தின் விமானம் மூலம் அயர்லாந்துக்கு அழைத்து வரப்பட்ட சர்வதேச குற்ற கும்பலின் தலைவராக கருதப்படும் டேனியல் கினாஹான் பலத்த வாகன பாதுகாப்புடன் டப்ளினில் உள்ள சிறப்பு கிரிமினல் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படுகிறார்.

டப்ளினின் பால்டோனலில் உள்ள காசெமெண்ட் விமான நிலையத்தில் டேனியல் கினாஹான்(Danial kinahan) வந்து இறங்கிய உடன் பலத்த பாதுகாப்பு கொண்ட வாகனங்கள் அவரை ஏற்றுக் கொண்டு அதிவேகமாக புறப்பட்ட நிலையில் தற்போது அந்த வாகன பேரணி சிறப்பு கிரிமினல் நீதிமன்றத்தை வந்தடைந்துள்ளது.

சர்வதேச குற்றக் கும்பலின் தலைவன் டப்ளினுக்கு நாடு கடத்தல்: யார் இந்த டேனியல் கினஹான்? | Danial Kinahan Arrived At Dublin Special Court

டேனியல் கினாஹானை ஏற்றிக் கொண்டு விமானம் துபாயில் இருந்து புறப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட 70,000க்கும் மேற்பட்டோர் இந்த விமானத்தை ஆன்லைன் மூலமாக விமானத்தை தீவிரமாக கண்காணித்துள்ளனர்.

கடத்தப்பட்ட ஜேர்மன் குடிமகன்: அல்ஜீரிய ராணுவம் எடுத்த அதிரடி நடவடிக்கை

கடத்தப்பட்ட ஜேர்மன் குடிமகன்: அல்ஜீரிய ராணுவம் எடுத்த அதிரடி நடவடிக்கை

யார் இந்த டேனியல் கினாஹான்

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்த டேனியல் கினாஹன், சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் கடத்தல் ஆகிய பெரும் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

டேனியல் கினாஹன் மிகப்பெரிய குற்றக் கும்பலின் தலைவன் என்று டப்ளின்  உயர்நீதிமன்றத்தால் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு கினாஹன் கார்டல் கும்பலும், ஹட்சி பிரிவினருக்கும் இடையே வெடித்த அதிகாரப் போட்டியின் போது கிட்டத்தட்ட 18 உயிர்கள் கொல்லப்பட்டது.

சர்வதேச குற்றக் கும்பலின் தலைவன் டப்ளினுக்கு நாடு கடத்தல்: யார் இந்த டேனியல் கினஹான்? | Danial Kinahan Arrived At Dublin Special Court

அயர்லாந்து மற்றும் ஸ்பெயின் இந்த கார்டல் கும்பல்கள் நடத்திய இரக்கமற்ற போரினால் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.

கடந்த 2022ம் ஆண்டு கூட டேனியல் கினாஹனை கைது செய்ய உதவி செய்பவர்களுக்கு கிட்டத்தட்ட 5 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.’

 கிட்டத்தட்ட அயர்லாந்து, பிரித்தானியா, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த குற்ற கும்பலை அழிக்க தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

கொகைன், கஞ்சா, மற்றும் உள்நாட்டு சரக்கு பொருட்கள் ஆகியவற்றை கடத்தி  பல கோடிகளுக்கு சட்டப்பூர்வ பணமாக மாற்றியதாக(money laundering) இவர் மீது குற்றச்சாட்டுகள் உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US