பயங்கரவாத சந்தேக நபராக மாறிய ராணுவ வீரர்! லண்டன் சிறையிலிருந்து தப்பிய 75 மணிநேரத்திற்குள் சிக்கினார்
பிரித்தானியாவின் லண்டன் சிறையில் இருந்து தப்பிய பயங்கரவாத சந்தேக நபர், பொலிஸாரால் 75 மணிநேரத்திற்குள் பிடிக்கப்பட்டார்.
சிறையில் அடைக்கப்பட்ட இராணுவ வீரர்
பிரிட்டிஷ் இராணுவத்தில் பணியாற்றிய இராணுவ வீரரான டேனியல் அபேட் காலிஃப் பொலிசாரால் கைது செய்யப்பட்டு லண்டன் சிறையில் அடைக்கப்பட்டார்.
கடந்த 2021ஆம் ஆண்டு ஒரு பயங்கரவாதிக்கு பயனுள்ளதாக இருக்கும் தகவலை அவர் வெளிப்படுத்தியதாக அல்லது பெற முயற்சித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டார்.
அத்துடன் 2019 மற்றும் 2022 ஆண்டுகளுக்கு இடையில் எதிரிக்கு பயனுள்ள தகவல்களை சேகரித்து அதிகாரப்பூர்வ ரகசிய சட்டத்தை மீறியதாகவும் டேனியல் மீது குற்றம்சாட்டப்பட்டது.
ஆனால் அவர் கடந்த புதன்கிழமை அன்று லண்டன் சிறையில் இருந்து டேனியல் தப்பினார். இதனைத் தொடர்ந்து பொலிஸார் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
டேனியல் கைது
இந்த நிலையில் சிஸ்விக் பகுதியில் சனிக்கிழமை காலை 11 மணியளவில் டேனியல் கைது செய்யப்பட்டுளளார். அவர் சிறையில் இருந்து தப்பிய 75 மணி நேரத்திற்குள் பிடிபட்டுள்ளார்.
இதுகுறித்து பொலிஸார் கூறுகையில், 'காலிஃபைக் கண்டறிவதற்கான எங்கள் விசாரணையில் பொதுமக்கள் மற்றும் ஊடகங்கள் அளித்த ஆதரவிற்கு நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம். மேலும் அவரைக் கைது செய்வது குறித்த கூடுதல் தகவலை சரியான நேரத்தில் வழங்குவோம்' என தெரிவித்துள்ளனர்.
Sky News
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |