திரையில் மட்டுமே வில்லன் டேனியல் பாலாஜி! நிஜத்தில் அம்மாவிற்கு செய்த பிரம்மாண்டமான விடயம்
முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவரான டேனியல் பாலாஜி தனது நிஜ வாழ்க்கையில் அம்மாவின் ஆசையை நிறைவேற்றிய செயல் கவனத்தை பெற்றுள்ளது.
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில்
தமிழ் சினிமாவின் முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவரான டேனியல் பாலாஜி நேற்று இரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருடைய உடல் புரசைவாக்கத்தில் உள்ள இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இவர், சென்னை ஆவடியில் ரகதூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கட்டியுள்ளார். கடந்த 2019 -ம் ஆண்டு முதல் கோயிலை கட்ட தொடங்கி கும்பாபிஷேகத்தை நடத்தியுள்ளார். தனது அம்மாவின் ஆசைக்காக டேனியல் பாலாஜி இந்த கோயிலை கட்டியுள்ளார்.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் அவர் பேசுகையில், "முறையான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. நான் கோயிலை கட்டுவதற்கு முன்பு கோயில்களின் வரலாறு பற்றி தெரிந்து கொண்டேன்.
கோயில்களுக்கு சவுண்ட் எனர்ஜி முக்கியமானதால் அங்காள பரமேஸ்வரி கோயிலிலும் அந்த வசதி செய்யப்பட்டுள்ளது. எனக்கு சிறுவயதில் இருந்தே கடவுள் நம்பிக்கை இருக்கிறது.
கடவுள் என்னுடன் எப்போதும் இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்பட்டேன் நாம் மனதார நினைக்கும் விடயங்கள் கண்டிப்பாக நடக்கும். கோயிலில் சற்று நேரம் அமைதியாக இருந்தாலே நிம்மதி கிடைக்கும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |