இந்தியா மோசமாக விளையாட்டை ஆடி வருகிறது- பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து
இந்தியா மோசமாக விளையாட்டை ஆடி வருகிறது என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலிய அசத்தல் வெற்றி
ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது.
சமீபத்தில் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் , 21 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரை ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இந்திய அணி சமீபத்தில் சொந்த மண்ணில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என இழந்தது.
பாகிஸ்தான் முன்னாள் வீரர் கருத்து
இந்நிலையில், உலகக்கோப்பைக்கான இந்திய அணி இன்னும் தயாரகவே இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
விராட் கோலி தன்னுடைய பழைய பார்முக்கு திரும்பவே நிறைய காலம் எடுத்துக்கொண்டார். சூர்யகுமார் யாதவை ஏன் வீணடிக்க வேண்டும்? சஞ்சு சாம்சனை ஏன் வீணடிக்க வேண்டும்? ஷ்ரேயஸ் அய்யரின் உடற்தகுதி கவலையை கொடுக்கிறது.
அவர் உலகக்கோப்பை தொடருக்கு முன் உடற்தகுதியை எட்டுவாரா என்பதே தெரியவில்லை.
இந்திய அணி சொந்த மண்ணில் உலகக்கோப்பை தொடரில் ஆட உள்ளது. ஆனால், அவர்கள் இன்னும் அவர்கள் தயாராவே இல்லை. இந்தியா மோசமாக கிரிக்கெட் விளையாட்டை ஆடி வருகிறது என்றார்.