ரூ.8 கோடி பணத்தை கொள்ளையிட்டு தப்பிய தம்பதி: பழச்சாறு ஆசையால் சிக்கியது அம்பலம்
இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து ஆயுதம் காட்டி மிரட்டி ரூ.8 கோடி கொள்ளையிட்டு தப்பிய தம்பதியை பொலிசார் பழச்சாறு பந்தல் வைத்து சிக்க வைத்துள்ளனர்.
8 கோடி ரூபாய் கொள்ளை
பஞ்சாப் மாகாணம் லுதியானாவில் உள்ள நிதி நிறுவனம் ஒன்றில் இருந்து 8 கோடி ரூபாய் கொள்ளையிட்டவர்கள் மந்தீப் கவுர் மற்றும் அவரது கணவர் ஜஸ்விந்தர் சிங். ஜூன் 10ம் திகதி ஆயுதம் ஏந்திய குழு ஒன்றை ஏற்பாடு செய்து இவர்கள் அந்த நிதி நிறுவனத்தில் இருந்து கொள்ளையிட்டுள்ளனர்.
@ndtv
தொடர்ந்து உத்தரகாண்ட் அருகாமையில் அமைந்துள்ள சீக்கியர்களின் புனிதத் தலமான ஹேம்குந்த் சாஹிப் குருத்வாராவுக்கு யாத்திரை சென்றுள்ளனர். மட்டுமின்றி, குறித்த தம்பதி நேபாளம் செல்ல திட்டமிட்டுள்ளதும் பொலிசாருக்கு தெரிய வந்துள்ளது.
ஆனால் இவர்களை தீவிரமாக தேடுவதாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது, அவர்கள் பயண திட்டத்தை மாற்றியுள்ளது. இதனையடுத்தே சீக்கியர்களின் புனிதத் தலமான ஹேம்குந்த் சாஹிப் குருத்வாராவுக்கு சென்றுள்ளனர்.
பொலிசாருக்கு இந்த தகவல் தெரிந்தும், அந்த தம்பதியை அடையாளம் காண்பது சவாலாக அமைந்துள்ளது. இந்த நிலையில், பக்தர்களுக்கான பழச்சாறு பந்தல் ஒன்றை அமைக்கும் திட்டத்திற்கு பொலிசார் வந்துள்ளனர்.
பழச்சாறால் வசமாக சிக்கிய தம்பதி
பொலிசாரின் திட்டம் இதுவென அறியாத அந்த தம்பதி, குறித்த பந்தலில் இருந்து பழச்சாறு வாங்கியதுடன், முகத்தை மறைத்திருந்த திரையை விலக்கி, அருந்தியுள்ளனர். மந்தீப் கவுர் மற்றும் அவரது கணவர் ஜஸ்விந்தர் சிங் அது என்பதை உறுதி செய்த பொலிசார், குருத்வாராவில் அவர்களின் வழிபாடுகள் முடியும் மட்டும் காத்திருந்துள்ளனர்.
@punjabpolice
தொடர்ந்து அங்கிருந்து வாகனத்தில் வெளியேறிய தம்பதியை விரட்டிச் சென்று பொலிசார் கைது செய்துள்ளனர். சுமார் 21 லட்சம் ரொக்கம் அவர்களிடம் இருந்து அப்போதே கைப்பற்றியதாகவும், அதன் பின்னர் இதுவரை சுமார் 6 கோடி அளவுக்கு மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, இந்த விவகாரத்தில் தொடர்புடைய 9 பேர்களை மொத்தமாக கைது செய்துள்ளதாகவும் பஞ்சாப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |