நெற்றியில் உள்ள கருமையை ஒரே நாளில் போக்க வேண்டுமா? இதே அசத்தலான டிப்ஸ்
Skin Care
By Kishanthini
பொதுவாக நம்மில் பலருக்கு நெற்றி மட்டுமே கருப்பாக காணப்படுவதுண்டு.
ஏனெனில் கொழுத்தும் வெயிலில் நீங்கள் வெளியே செல்லும் போது உங்கள் முகத்தை விட நெற்றி பகுதி அதிகமாக கருமையாகிவிடுகிறது.
முகம் ஒரு நிறமாகவும், நெற்றி ஒரு நிறமாகவும் இருந்தால் நன்றாக இருக்காது. இதனை போக்க ஒரு சில வழிகள் உள்ளது. தற்போது அவற்றை பார்ப்போம்.
- ஒரு ஸ்பூன் கடலைமாவுடன், சிறிதளவு மஞ்சள் மற்றும் 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் ஆகிய மூன்றையும் நன்றாக கலந்து நெற்றியில் அப்ளை செய்தால், நெற்றியில் உள்ள இறந்த செல்கள் போய்விடும்.
- மசித்த உருளைக்கிழங்கை நெற்றியில் கருமை உள்ள இடத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து கழுவவும். இதனை வாரத்தில் 2-3 முறை செய்து வந்தால் நெற்றி பளிச்சிடும்.
-
இளநீர் மற்றும் சந்தன பவுடரை சரிபாதியாக எடுத்து நெற்றியில் தடவினால், நெற்றியில் உள்ள கருமை அகன்றுவிடும். இதனை வாரத்தில் மூன்று அல்லது 4 முறை செய்யலாம்.
- மோர் மற்றும் வெண்ணெய் ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து, நெற்றியில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து கழுவினால் வெயிலினால் ஏற்பட்ட கருமை மறையும்.
- இரவு தூங்கும் முன், தக்காளி பேஸ்டை நெற்றில் தடவி காலையில் கழுவினால், வெயிலினால் ஏற்பட்ட கருமைக்கு மிகச்சிறந்த பலனை தரும்.
-
அன்னாச்சிப்பழம் மற்றும் தேன் இவை இரண்டையும் சரிசமமாக எடுத்துக்கொண்டு, நெற்றி முழுவதும் தடவ வேண்டும்.
15 நிமிடம் கழிந்து குளிர்ந்த நீரினால் கழுவினால் அற்புதமான பலனை தரும்.
- பப்பாளி பேஸ்ட்டை நெற்றியில் தடவி காய்ந்த பின் குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும்.
- ஆரஞ்சு ஜீஸை நெற்றியில் தடவினால், நெற்றியில் உள்ள கருமை நீங்கி, முகம் பொழிவு பெரும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US