பெற்றோருக்கே துரோகம் செய்யும் உள்துறைச் செயலர்: முன்வைக்கப்படும் கடும் விமர்சனம்
பிரித்தானிய உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத் புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த எடுத்துவரும் நடவடிக்கைகள் தொடர்பில், அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
பெற்றோருக்கே துரோகம் செய்துள்ள பெண்

Daily mirror பத்திரிகை ஊடகவியலாளரான டேரன் (Darren Lewis) என்பவர், புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்துவரும் உள்துறைச் செயலரான ஷபானா மஹ்மூத் மீது கடும் விமர்சனம் முன்வைத்துள்ளார்.
ஏற்கனவே ஷபானாவின் கட்சியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் புலம்பெயர்தல் தொடர்பில் அவர் எடுத்துவரும் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்துவருகிறார்கள்.
இந்நிலையில், ஷபானாவின் போலி முகம் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார் டேரன்.

ஷபானாவின் பெற்றோர் பாகிஸ்தான் வம்சாவளியினர். புலம்பெயர்தல் பின்னணி கொண்டவரான ஷபானா, புலம்பெயர்தலுக்கு எதிராக கடும் நடவடிக்கைகள் எடுத்துவருகிறார்.

2014ஆம் ஆண்டு, பாலஸ்தீன ஆதரவு போராட்டம் ஒன்றில் பங்கேற்று முழக்கம் எழுப்பியவர் ஷபானா. ஆனால், அவர் உள்துறைச் செயலரானபின் போராட்டங்களுக்கு எதிரான அரசின் சட்டங்களுக்கு ஆதரவளித்துள்ளார்.

முன்னர், கடுமையான புகலிடக்கோரிக்கை அமைப்புக்கு எதிராக வாக்களித்தவர் ஷபானா. இன்று, புகலிடக்கோரிக்கையாளர்களுக்கு எதிராக அவரே கடுமையான நடவடிக்கைகள் எடுத்துவருகிறார்.
Lots of people @WMPSC #gaza protest today outside Sainsbury's in central Birmingham. pic.twitter.com/oV90Wq6nd5
— Shabana Mahmood MP (@ShabanaMahmood) August 2, 2014
ஆக, ஷபானா, புலம்பெயர்தல் பின்னணி கொண்ட தனது பெற்றோருக்கே துரோகம் செய்துள்ளார், அது அவமானத்துக்குரிய விடயம் என்கிறார் டேரன்.
லேபர் கட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன், ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக பேசிய வீடியோக்கள் இணையத்தில் மீண்டும் உலாவரத் துவங்கியுள்ளன.
இன்று, முறைப்படி அகதி நிலை பெற்றவர்களையும் நாட்டை விட்டு வெளியேற்ற திட்டமிட்டுவருகிறார் ஷபானா.
இப்படி பதவியும் வசதியும் வந்ததும் பழையதை மறந்துவிட்டு ஷபானா போலி முகம் காட்டிவரும் நிலையில், அடுத்த தேர்தலில் மக்கள் அவருக்கு சரியான பதிலடி கொடுப்பார்கள் என்கிறார் டேரன்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |