பேச விடாமல் அசிங்கப்படுத்துகிறார் விஜய் சேதுபதி- வெளியேறிய போட்டியாளர் குற்றச்சாட்டு
தமிழ் சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ்.
இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரசியம் குறையாமல் நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார்.
தற்போது நான்கு வாரங்களைக் கடந்து பிக்பாஸ் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.
இதில் வாராவாரம் விஜய் சேதுபதியின் எபிசோடு ஒளிபரப்பாகும் போது அவர் செய்யும் விஷயங்களை மக்கள் ஏற்றுக் கொள்ளும் விதம் மாறி வருகிறது.
விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் விதம் குறித்து கலவையான விமர்சனங்களை அதிகளவில் தற்போது காணமுடிகிறது.
கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகை தர்ஷா குப்தா வெளியேறினார்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர் விஜய் சேதுபதி குறித்து தர்ஷா குப்தா பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன் வைத்துள்ளார்.
சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய தர்ஷா கூறுகையில், "விஜய் சேதுபதி பெரும்பாலும் யாரையும் பேச விடுவதில்லை, தொடர்ந்து அசிங்கப்படுத்துகிறார்.
மேலும் , அவரிடம் பேசவே பயமாக இருக்கிறது" என்று அவர் கூறியுள்ள குற்றச்சாட்டு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |