25 ஆண்டுக்கு பின் குல தெய்வ கோவிலில் தரிசனம்! கண்கலங்கிய சசிகலா: சாமியார் சொன்ன வார்த்தை
அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்த, குல தெய்வ கோவிலுக்கு சென்ற நிலையில் அங்கு கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
சொத்துகுவிப்பு வழக்கு காரணமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த சசிகலா, தண்டனை காலம் நிறைவு பெற்ற பின், கடந்த ஜனவரி மாதம் தமிழகம் திரும்பினார்.
சட்ட சபை தேர்தல் நடைபெறவுள்ளதால், இவரின் வருமை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது, ஆனால் இவர் அதிமுக வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், அதிமுக உடைந்து போய்விடக் கூடாது என்பதற்காகவும் அரசியலில் இருந்து ஒதுங்குவதாக அறிவித்தார்.
தேர்தல் முடிவுக்கு பின் சசிகலாவின் வருகையை மீண்டும் எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. அரசியலில் இருந்து ஒதுங்கிய சசிகலா, கோவில்களுக்கு அடிக்கடி சென்று வருகிறார்.
இந்நிலையில், அவர் தற்போது குலதெய்வ வழிபாடுக்காக, காதுகுத்து விழாவிற்காக தஞ்சாவூர் சென்றிருந்தார். கணவர் நடராஜனுக்கு சொந்தமாக கோவிலான இது, தஞ்சாவூர் அருகே உள்ள விளார் கிராமத்தில் உள்ளது. வீரனார், மதுரை வீரன் கோவில். வயல்வெளி, தென்னந்ததோப்பிற்கு இடையே இக்கோவில் அமைந்துள்ளது.
சசிகலாவின் வருகை நேற்றே கிடா விருந்து வைக்கப்பட்டது. இன்று காலை நடைபெற்ற காதுகுத்து விழாவில் வந்த சசிகலாவுடன், அண்ணன் மகன் டாக்டர் வெங்கடேஷ் இருந்தார். திருமணம் நடைபெற்ற புதிதில் கணவர் நடராஜனுடன் இந்த கோவிலுக்கு வந்த சசிகலா, 25 ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் கோவிலுக்கு வந்ததால், சசிகலா மிகவும் உணர்ச்சிவசமுடன் காணப்பட்டார்.
மேலும், கோவிலில் கண்ணீர்மல்க சசிகலா சாமி கும்பிட்டாராம். அரசியலில் நட்பும், நன்றியும் என்கிற வார்த்தைக்கு அர்த்தமே பலருக்கு தெரியமல் போய்விட்டது. கடைசி வரை அந்த வார்த்தைக்கு பாத்திரமா நான் இருந்துட்டா போதும் என்று அருகில் நின்றிருந்த வெங்கடேசிடம் சொன்ன போது சசிகலாவின் கண்களின் ஓரத்தில் கண்ணீர் வந்துள்ளது.
சாமி கும்பிட்டு முடித்த உடன் அங்கு வந்த சாமியார் ஒருவர், சசிகலாவிடம்,இனி நீ நினைத்த காரியம் எல்லாம் நிச்சயம் நடக்கும். தோல்வியே உனக்கு இனி இல்லை என்று கேட்ட, சசிகலா அதன் பின் சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு சிறிது நேரத்தில் புறப்பட்டு சென்றார்.
