சொந்த மண்ணிலேயே பாகிஸ்தான் அணியை பந்தாடிய வீரர்!
பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி வீரர் டெரல் மிட்செல் சதம் விளாசினார்.
முதல் ஒருநாள் போட்டி
ராவல்பிண்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.
முதலில் துடுப்பாட்டத்தை துவங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவரில் 288 ஓட்டங்கள் குவித்தது. தொடக்க வீரர் வில் யங் 78 பந்துகளில் 86 ஓட்டங்கள் விளாசினார். அதன் பின்னர் வந்த வீரர்கள் பெருமளவில் ஓட்டங்கள் எடுக்க தவறினர்.
Will Young's aggressive knock comes to an end on 86 off 79 (8 fours & 2 sixes). He & Mitchell (46*) combining for a run-a-ball 100-run stand to push past 150 at the halfway stage. Tom Latham enters. Follow play LIVE in NZ on @skysportnz. Scoring | https://t.co/R844jDEmWs #PAKvNZ pic.twitter.com/NMBgXxGz7U
— BLACKCAPS (@BLACKCAPS) April 27, 2023
டெரல் மிட்செல் அபார சதம்
ஆனால் ஒற்றை ஆளாக பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்த டெரல் மிட்செல் 115 பந்துகளில் 113 ஓட்டங்கள் விளாசினார். இதில் ஒரு சிக்ஸர் மற்றும் 11 பவுண்டரிகள் அடங்கும்.
22வது ஒருநாள் போட்டியில் விளையாடும் டெரல் மிட்செல்லுக்கு இது இரண்டாவது சதம் ஆகும். பாகிஸ்தான் தரப்பில் ஷஹீன் அப்ரிடி, நசீம் ஷா மற்றும் ராஃப் தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
Second ODI hundred for Daryl Mitchell as New Zealand cruise ?#PAKvNZ | ? https://t.co/V8r2Bx9y4k pic.twitter.com/VLFtgTXrDv
— ICC (@ICC) April 27, 2023