அற்புதமான பீல்டிங் திறமையால் மைதானத்தையே உறைய வைத்த நியூசிலாந்து வீரர்! வைரலாகும் வீடியோ
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டேரில் மிட்செல் தனது அற்புதமான பீல்டிங் திறமையால் அனைவரையும் மிரள வைத்தார்.
இன்று அபுதாபியில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ஆப்கானிஸ்தான் வீரர் நஜிபுல்லா 73 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் போல்ட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
கடைசி ஓவரை நியூசிலாந்து பந்து வீச்சாளர் நீஷம் வீசினார்.
நீஷம் வீசிய முதல் பந்தையே பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான் பவுண்டரியை நோக்கி பறக்கவிட்டார்.
பவுண்டரி எல்லைக்கு அருகே பீல்டிங்கில் இருந்த டேரில் மிட்செல், சிக்ஸருக்கு சென்ற பந்தை அந்தரத்தில் பிடித்து அந்தரத்திலே உள்ளே வீசிவிட்டு, பவுண்டரி லைன் மீது விழுந்தார்.
முதலில் அனைவரும் அது சிக்ஸர் என நினைத்த நிலையில், 3வது நடுவர் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தபோது மிட்செல் அந்தரத்திலே பந்தை மைதானத்திற்கு உள்ளே வீசியது தெரியவந்தது.
மிட்செல் பீல்டிங் திறமையை கண்டு மைதானத்தில் இருந்த அனைவரும் மிரண்டனர்.
Is it the bird? Is it the plane ? No! it's Daryl Mitchell The SuperMan. #AfgvsNZ #ICCT20WorldCup2021 pic.twitter.com/FNyudwQFEg
— Irfan Ameer (@IrfanAm71763527) November 7, 2021
அதுமட்டுமின்றி குறித்து வீடியோ இணையத்தில் வைரலாக, சமூக வலைதளங்களில் பலர் மிட்செலின் அற்புதமான திறமையை பாராட்டி வருகின்றனர்.