சிக்ஸர் மழைபொழிந்து, 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய இலங்கை வீரர்! LPL முதல் போட்டியிலேயே மிரட்டல்
பல்லேகேலேவில் நடந்த LPL தொடரில், தம்புல்லா அணிக்கு எதிரான போட்டியில் Kandy Falcons 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
சாப்மேன்-விக்ரமசிங்கே
லங்கா பிரீமியர் லீக் 2024யின் முதல் போட்டி பல்லேகேலேவில் நேற்று நடந்தது. Dambulla Sixers மற்றும் Kandy Falcons அணிகள் இதில் மோதின.
முதலில் களமிறங்கிய தம்புல்லா அணி தசுன் ஷானகாவின் மிரட்டலான பந்துவீச்சில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் அந்த அணி 25 ஓட்டங்களுக்கு 4 விக்கெட் என தடுமாறியது.
அப்போது கைகோர்த்த மார்க் சாப்மேன் மற்றும் சமிந்து விக்ரமசிங்கே கூட்டணி அதிரடியாக ஆடி அணியை மீட்டது.
சாப்மேன் (Champman) 61 பந்துகளில் 4 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 91 ஓட்டங்களும், விக்ரமசிங்கே (Wickramasinghe) 42 பந்துகளில் 3 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 62 ஓட்டங்களும் விளாசினர்.
இதன்மூலம் Dambulla Sixers 4 விக்கெட் இழப்பிற்கு 179 ஓட்டங்கள் குவித்தது. ஷானகா 3 விக்கெட்டுகளும், ஹஸ்னைன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து களமிறங்கிய Kandy Falcons அணிக்கு முதல் ஓவரிலேயே துஷாரா அதிர்ச்சி கொடுத்தார். அவரது பந்துவீச்சில் ஆண்ட்ரே பிளெட்சர் டக்அவுட் ஆனார்.
தசுன் ஷானகா விளாசல்
பின்னர் வந்த மொஹம்மது ஹாரிஸ் 5 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். எனினும் தொடக்க வீரர் தினேஷ் சண்டிமல் (Dinesh Chandimal) அதிரடியாக 40 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் விளாசினார்.
அதன் பின்னர் ஏஞ்சலோ மேத்யூஸுடன் கைகோர்த்த தசுன் ஷானகா சிக்ஸர் மழை பொழிந்தார். இந்த கூட்டணி 18வது ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது.
மேத்யூஸ் 20 பந்துகளில் 37 ஓட்டங்கள் எடுத்தார். ஷானகா 15 பந்துகளில் 5 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 46 ஓட்டங்கள் குவித்தார். ஆட்டநாயகன் விருதையும் அவரே கைப்பற்றினார்.
மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |