3 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், 12 பந்துகளில் 36 ரன் விளாசிய ஷானகா! சியாட்டில் அபார வெற்றி
மேஜர் லீக் போட்டியில் சியாட்டில் ஓர்கஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வாஷிங்டன் ஃப்ரீடம் அணியை வீழ்த்தியது.
ஓவன், சாப்மேன் அரைசதம்
வாஷிங்டன் ஃப்ரீடம் மற்றும் சியாட்டில் ஓர்கஸ் அணிகளுக்கு இடையிலான மேஜர் லீக் போட்டி டல்லாஸில் நடந்தது.

முதலில் களமிறங்கிய வாஷிங்டன் ஃப்ரீடம் அணியில் மிட்செல் ஓவன் 25 பந்துகளில் 61 ஓட்டங்கள் விளாசினார்.
மார்க் சாப்மேன் 24 பந்துகளில் 57 ஓட்டங்களும், கோஸ் 21 பந்துகளில் 35 ஓட்டங்களும் விளாச, வாஷிங்டன் ஃப்ரீடம் அணி 216 ஓட்டங்கள் குவித்தது.
ஓட்னெய்ல் பார்ட்மன் 4 விக்கெட்டுகளும், தசுன் ஷானகா 3 விக்கெட்டுகளும், ஜஸ்தீப் சிங் 2 விக்கெட்டுகளும், ஹர்மீத் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
தசுன் ஷானகா மிரட்டல்
பின்னர் ஆடிய சியாட்டில் ஓர்கஸ் அணி 17.4 ஓவர்களில், 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 219 ஓட்டங்கள் குவித்து வெற்றி பெற்றது.

விக்கெட் கீப்பர் டிம் செய்பெர்ட் 33 பந்துகளில் 78 ஓட்டங்களும் (6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள்), மேத்யூ ப்ரீட்ஸ்கி 36 பந்துகளில் 66 ஓட்டங்களும் (4 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்) விளாசினார்.
இலங்கையின் தசுன் ஷானகா ஆட்டமிழக்காமல் 12 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 36 ஓட்டங்கள் குவித்தார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |