உலக கிண்ணத்தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணி தலைவர் இவர் தான்!
இலங்கை ஒருநாள் மற்றும் T20 அணிகளின் தலைவராக இருந்த தசுன் ஷானக்கவை ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் இருந்து நீக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதவி விலகும் தசுன் ஷானக்க
இன்றைய தினம் காலை அவர் அழைக்கப்பட்டதாகவும், தலைமைத்துவத்தை விட்டு விலக விருப்பம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் பதவி விலகியுள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.
மேலும், இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான புதிய தலைவர் இன்று பிற்பகல் நியமிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இரண்டாம் இணைப்பு
2023 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணிக்கு தசுன் ஷனக தலைமை தாங்குவாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் உலகக் கோப்பை வரை தசுன் ஷனகவை தொடர தேர்வுக்குழு முடிவு செய்துள்ளதாக SLC மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தசுன் ஷனக தான் இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து விலகுவதாக தெரிவித்த போதும் அவரே இலங்கை அணியின் தலைவராக செயற்படுவதாக அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Dasun Shanaka will captain the Sri Lanka squad for the Cricket World Cup 2023. - Senior SLC official told NewsWire.pic.twitter.com/C0QtOyAL7O #LKA #SriLanka #CricketTwitter #CWC23 #DasunShanaka #WorldCup2023
— Sri Lanka Tweet ?? (@SriLankaTweet) September 20, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |