என்னுடைய வலிமை! குடும்பத்தாருடன் இலங்கை கேப்டன் தசுன் ஷனகா வெளியிட்ட புகைப்படம்
ஆசிய கோப்பையை வென்ற கையோடு குடும்பத்தாருடன் தசுன் ஷனகா எடுத்து கொண்ட புகைப்படம்.
குடும்பமே பலம் என டுவிட்டரில் பதிவு.
என்னுடைய வலிமை என் குடும்பம் தான் என இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த 15-வது ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை சாம்பியன் பட்டம் பெற்றது. இறுதிப்போட்டிக்கு முன்பு இந்த தொடரில் நடந்த 12 ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த அணி 3 முறை மட்டுமே வெற்றி பெற்றது.
2-வது ஆடிய அணி 9 ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இதனால் இறுதிப் போட்டியில் 2-வது ஆடிய பாகிஸ்தான் கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
My strength ♥️ pic.twitter.com/XEMv3qDfnz
— Dasun Shanaka (@dasunshanaka1) September 13, 2022
ஆனால் முதலில் ஆடிய இலங்கை சாம்பியன் பட்டம் பெற்று முத்திரை பதித்தது. இந்த நிலையில் இலங்கை அணி கேப்டன் தசுன் ஷனகா வெற்றி கோப்பையை கையில் ஏந்தியபடி தனது மனைவி மற்றும் குடும்பத்தாருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், என் குடும்பம் தான் என் பலம் என தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு மிகப்பெரிய அளவில் வைரலாகி லைக்குகளை குவித்துள்ளது.