வாவ்... அற்புதமான கேட்ச்! நமீபியா ரசிகர்களை உறைய வைத்த இலங்கை கேப்டன்: வைரலாகும் வீடியோ
உலகக் கோப்பை போட்டியில் நமீபியா அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை கேப்டன் தசுன் சானக்க கண் இமைக்கும் நொடியில் பிடித்த அசத்தல் கேட்ச்சை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
நேற்று (செப்டம்ர் 18) ரவுண்டு 1 சுற்றில் ‘ஏ’ பிரிவில் நடந்த போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தி இலங்கை முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்த வெற்றியின் மூலம் தற்போது ‘ஏ’ பிரிவு புள்ளிப்பட்டியலில் இலங்கை 2 புள்ளிகளுடன் நெட் ரன் ரேட் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளது, அயர்லாந்து 2 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், நெதர்லாந்து புள்ளிகள் ஏதும் இல்லாமல் 3வது இடத்திலும், நமீபியா 4வது இடத்திலும் உள்ளன.
நமீபியா இன்னிங்ஸின் போது 18 ஓவரின் இரண்டாவது பந்தை சமீரா வீச, துடுப்பாடிய நமீபியா வீரர் Trumpelmann பந்தை விளாச முயன்றார், ஆனால் பந்து பேட்டில் பட்டு அருகிலேயே விழ போனது.
அப்போது, யாரும் எதிர்பாராதவிதமாக இலங்கை கேப்டன் தசுன் சானக்க ஓடி வந்த சறுக்கிய படி ஒற்றை கையில் பந்தை கேட்ச் பிடித்து அனைவரையும் மிரள வைத்தார்.
சானக்காவின் அற்புதமான கேட்ச்சை பார்த்து நமீபியா ரசிகர்கள் ஒருவர் ‘வாவ்’ என வியப்படைந்தார்.
இதை கண்டு மைதானத்தில் இருந்த இலங்கை ரசிகர்களும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
சானக்க பிடித்த கேட்ச்சை கௌரவிக்கும் வகையில் டி20உலகக்கோப்பைக்கான அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த காட்சி வெளியிடப்பட்டுள்ளது.