மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரிலிருந்து நட்சத்திர வீரர் திடீர் விலகல்! இலங்கை அணியின் கேப்டன் பதவியில் புதிய மாற்றம்
இலங்கை டி-20 அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட தசூன் சானக்க, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரிலிருந்து விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளுக்கான ஒருநாள் மற்றும் டி-20 அணியை இலங்கை கிரிக்கெட் அறிவித்தது. திமுத் கருணாரத்த ஒரு நாள் அணியின் கேப்டனாகவும், தசூன் சானக்க டி-20 அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், கிரிக்கெட் தொடரில் விளையாட 23ம் திகதி அதிகாலை இலங்கை அணி மேற்கிந்திய தீவுகளுக்கு புறப்பட்டது.
இந்நிலையில், விசா பெறுவது தொடர்பான பிரச்சினை காரணமாக டி-20 அணி கேப்டன் தசூன் சானக்க, அணியுடன் சேர்ந்து பயணம் செய்யவில்லை என இலங்கை கிரிக்கெட் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், விசா பிரச்சினை காரணமாக மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரிலிருந்து சானக்க விலகிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மார்ச் 3ம் திகதி தொடங்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் சானக்காவுக்கு பதிலாக மேத்யூஸ் கேப்டனாக இலங்கை அணியை வழிநடத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.