2030வாக்கில்... பிரித்தானியர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் செய்தி ஒன்றை தெரிவித்துள்ள ஆய்வு
பொருளாதாரம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் பிரபல ஆய்வமைப்பு ஒன்று, 2030வாக்கில் பிரித்தானியக் குடும்பங்கள் அனைத்தின் வாழ்க்கைத்தரமும் வீழ்ச்சியடையும் எனக்கூறி மக்கள் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.
பிரித்தானியர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் செய்தி
பிரித்தானிய மக்களுடைய வாழ்க்கைத்தரத்தை உயர்த்தப்போவதாக பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.
ஆனால், அதற்கு நேர் எதிராக, 2030வாக்கில் பிரித்தானியக் குடும்பங்கள் அனைத்தின் வாழ்க்கைத்தரமும் வீழ்ச்சியடையும் என பொருளாதாரம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் பிரபல தொண்டு நிறுவனமான Joseph Rowntree Foundation (JRF) தெரிவித்துள்ள விடயம் கவலையை ஏற்படுத்துவதாக உள்ளது.
அந்த அமைப்பு மேற்கொண்ட விரிவான ஆய்வில், 2030 வாக்கில், சராசரி பிரித்தானிய குடும்பங்களின் வருவாய் 1,400 பவுண்டுகள் குறையும் என்றும், மிகக்குறைந்த வருவாய் கொண்ட குடும்பங்களின் வருவாய் ஆண்டுக்கு 900 பவுண்டுகள் குறையும் என்றும் தெரியவந்துள்ளது.
அதாவது, ஏழைக் குடும்பங்கள் நிலைமை மேலும் மோசமாகும் என்றும், அவர்களுடைய வருவாய் 6 சதவிகிதம் குறையும் என்றும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது.
ஆக, ஏழை பணக்காரர்கள் என்ற பாகுபாடில்லாமல் எல்லா குடும்பங்களும் பாதிப்புக்குள்ளாக உள்ளன.
பிரித்தானிய சேன்ஸலரான ரேச்சல் ரீவ்ஸ், தான் வரிகளையும் கடன் வாங்குவதையும் அதிகரிப்பதற்கு பதிலாக, பல்வேறு துறைகளுக்கு அளிக்கப்பட்டுவரும் நிதியில் கைவைக்கப்போவது குறித்து அறிவிப்பு வெளியிட இருக்கிறார்.
ஆனால், எதிர்பார்க்கப்படுவதைவிட அதிக கடன்கள் உலகச் சந்தையில் ஏற்படுத்தவிருக்கும் தாக்கம், அதிக வட்டி செலுத்தும் நிலைக்கு வழிவகுக்க, எதிர்பார்க்கப்படுவதைவிட குறைந்த பொருளாதார வளர்ச்சியும் சேர்ந்துகொள்ள, வேறு வழியில்லாமல், நிதிக்காக சேன்ஸலர் வேறு வழிகளைக் கண்டறியும் நிலையே உருவாக உள்ளது என்பதுதான் நிதர்சனம் என்கிறார்கள் அரசியல் வல்லுநர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |