தினம் ஒரு லட்டு.., சட்டுன்னு உடல் எடையை குறைக்கலாம்: எப்படி செய்வது?
உடல் எடையை குறைக்க விரும்புவோர், சர்க்கரை நோயாளிகள் என அனைவரும் இந்த லட்டை உண்ணலாம்.
அந்தவகையில், ஆரோக்கியம் நிறைந்த இந்த சுவையான லட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஓட்ஸ்- 1 கப்
- பாதாம்- 250g
- பேரிச்சம்பழம்- 1 கப்
செய்முறை
முதலில் ஒரு சிறிய கடாயில் ஓட்ஸை சேர்த்து நன்றாக பொன்னிறமாக மாறும் வரை வறுத்து எடுக்க வேண்டும்.
அடுத்து அதே கடாயில் பாதாம் பருப்பையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்து இரண்டையும் ஆறவைக்கவும்.
இப்போது விதை நீக்கிய பேரீச்சம் பழம், வறுத்து ஓட்ஸ் மற்றும் பாதாமை மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் சேர்த்து நன்றாக கிளறி அழுத்தி பிசைய வேண்டும்.
தொடர்ந்து நன்றாக அழுத்தி பிசைந்து சிறிய உருண்டைகளாக லட்டு போல உருட்ட வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான ஆரோக்கியமான பேரீச்சம் பழ ஓட்ஸ் லட்டு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |