20 வயது பெண்ணை கவர்ந்த 77 வயது பிரித்தானியர்! டேட்டிங் ஆப்பில் மலர்ந்த விசித்திர காதல் கதை
டேட்டிங் ஆப் மூலம் 20 வயது இளம்பெண்ணுக்கும், 77 வயது தாத்தாவுக்கும் காதல் மலர்ந்துள்ள நிகழ்வு அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மரில் வசித்து வருபவர் Jo (20). இவர் கல்லூரியில் படித்த்து வருகிறார். இங்கிலாந்தில் வசித்து வருபவர் David (77). இவர் இசையமைப்பாளராக பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் இருவரும் காதலித்து வருகின்றனர். இருவருக்கிடையில் உள்ள 57 வயது இடைவெளி இவர்களின் காதலுக்கு தடையாக இல்லை.
காதலுக்கு கண் இல்லை என்று சொல்வதற்கு இந்த நிகழ்வு சிறந்த எடுத்துக்காட்டாய் அமைந்துள்ளது. David திருமணமானவர் என்றாலும் அவருக்கு குழந்தை இல்லை. அவரது மனைவியும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துள்ளார்.
Jo மற்றும் David டேட்டிங் ஆப் மூலம் சந்தித்து பேச தொடங்கியுள்ளனர். David தன்னை ஒருபோதும் வயதானவராகக் கருதுவதில்லை என்றும் தன்னை எப்போதும் இளமையாகவே கருதுகிறார். அதுமட்டும் இல்லாமல் அவர் வயதில் தன்னை விட 50 வயது குறைந்த பெண்களுடன் மட்டுமே உறவு கொள்ள விரும்புவாராம்.
டேட்டிங் தளத்தில் டேவிட்டை கண்டுபிடித்ததை, ஜோ தன்னை பற்றிய விளக்கத்தில் குறிப்பிட்டிருந்தார். முதலில் இருவரும் நண்பர்களாக தான் பேச தொடங்கியுள்ளனர்.
ஆனால் அது நாளடைவில் காதலாக உருவெடுத்துள்ளது. இது குறித்து David கூறியதாவது, நாங்கள் இருவரும் உண்மையாக காதலிக்கிறோம். கோவிட் தொற்று சூழ்நிலை தான் நாங்கள் இருவரும் சந்திக்காமல் இருக்க காரணம். ஜோவின் வழிகாட்டியாகவும் வாழ்க்கைத் துணையாகவும் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
விரைவில் நாங்கள் திருமணம் செய்து கொள்ள் உள்ளதாகவும், ஜோவின் பாஸ்போர்ட் தயாரான உடனே அவர் என்னை
சந்திக்க இங்கிலாந்துக்கு வருவார் என David மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.