13 வயது மகள் எடுத்த விபரீத முடிவால் உயிரை மாய்த்துக் கொண்ட தாய்
தமிழக மாவட்டம் விருதுநகரில் தாயும், மகளும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
மனமுடைந்த மகள்
விருதுநகர் மாவட்டம் மாரனேரி அம்மாபட்டியைச் சேர்ந்த தம்பதி பாலமுருகன், பாப்புக்குட்டி.(41). இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் உள்ள நிலையில், இரண்டாவது மகள் இந்துமதி (13) 8ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் பாடசாலைக்கு செல்லாமல் இருந்த மகளை தாய் பாப்புக்குட்டி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த இந்துமதி சோகமாக இருந்ததாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து அவர் தூக்கிக்கிட்டு உயிரை விட்டுள்ளார். சிறிது நேரத்தில் வீட்டுக்கு வந்த பாப்புக்குட்டி மகளின் நிலைப் பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதுள்ளார்.
உயிரை மாய்த்துக் கொண்ட தாய்
பின்னர் கணவருக்கு இதுகுறித்து செல்போனில் கூறிய அவர், தானும் உயிரை மாய்த்துக் கொள்ளப் போவதாக தெரிவித்திருக்கிறார். அதன்படியே கணவர் பாலமுருகன் வீட்டுக்கு வரும் முன் பாப்புக்குட்டியும் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். மனைவி, மகள் இருவரும் உயிருடன் இல்லை என்பதை நேரில் பார்த்த பாலமுருகன் அலறியுள்ளார்.
இதனையடுத்து தகவல் அறிந்த பொலிஸார் தாய் - மகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அத்துடன் இத்துயர சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |