பாரதிராஜாவின் கடைசி ஆசையை நிறைவேற்றிய மகள் ஜனனி
தமிழ்த் திரையுலகில் மண் வாசனை மாறாத திரைப்படங்களை இயக்கி தனக்கென்று தனிப்பாதையை உருவாக்கியவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா.
அவரது மரணம் திரையுலகினரை மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழக மக்களையுமே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பாரதிராஜா, தனது மகன் மனோஜ் மரணமடைந்த பிறகு மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பாரதிராஜா மலேசியாவில் உள்ள தனது மகள் ஜனனியின் வீட்டில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட உடனே தனது மகள் ஜனனியிடம் பாரதிராஜா தனது கடைசி ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.
நான் இறந்த பிறகு என்னை சென்னையில் அடக்கம் செய்துவிட வேண்டாம். சொந்த ஊரில் தான் நான் ஓய்வெடுக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.
எனவே தேனி மாவட்டம் வத்தலகுண்டு அருகே உள்ள காட்ரோடு பண்ணை தோட்டத்தில்தான் எனது உடலை அடக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நான் பிறந்த மண்ணில் என்னை அடக்கம் செய்தால் தான் என் தாய் மடியில் உறங்குவது போன்ற உணர்வு ஏற்படும் எனவும் பாரதிராஜா கூறியுள்ளார்.
இந்நிலையில், தந்தையின் ஆசையை நிறைவேற்றும் வகையில் பாரதிராஜாவின் உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு இன்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
அதன்படி, பாரதிராஜாவின் உடல் அவரது பண்ணை வீட்டில் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன், முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |