கொல்லப்பட்ட தாயின் இதயத்துடிப்பை மீண்டும் கேட்டு கண்ணீர் வடித்த மகள்கள்: நெகிழவைத்த ஒரு சம்பவம்
பிரித்தானியர்களான ஒரு தாயும் அவரது இரண்டு மகள்களும் இஸ்ரேல் நாட்டில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட துயர சம்பவம் நினைவிருக்கலாம்.
இந்நிலையில், கொல்லப்பட்ட அந்த தாயின் இதயத்துடிப்பை மீண்டும் கேட்கும் ஒரு வாய்ப்பு அவரது மகள்களுக்கு கிடைத்தது.
சுற்றுலா சென்ற குடும்பத்துக்கு நேர்ந்த பயங்கரம்
இஸ்ரேல் நாட்டுக்கு சுற்றுலா சென்றிருந்த பிரித்தானிய இஸ்ரேலியர்களான Lucy Dee (48)ம், அவரது மகள்களில் Maia (20) மற்றும் Rina (15) ஆகியோரும் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
அவர்கள் சென்ற கார் மீது, பாலஸ்தீனிய தீவிரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நபர்கள் திடீரென கண்மூடித்தனமாக சுட்டதில், Maia, மற்றும் Rina ஆகிய இருவரும் உடனடியாக கொல்லப்பட, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட Lucy பின்னர் உயிரிழந்தார்.
Credit: Jotam Confino/The Jewish News
தாயின் இதயத்துடிப்பை மீண்டும் கேட்கும் வாய்ப்பு
இந்நிலையில், கொல்லப்பட்ட தங்கள் தாயின் இதயத்துடிப்பை மீண்டும் கேட்கும் ஒரு வாய்ப்பு Lucyயின் மற்ற இரண்டு மகள்களான Keren (19) மற்றும் Tali (17) ஆகியோருக்குக் கிடைத்தது.
ஆம், Lucy மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவர் பிழைக்க வாய்ப்பில்லை என தெரியவந்ததும், அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
Credit: DEE FAMILY/UNPIXS
Lucyயின் இதயம் Lital Valenci (51) என்ற பெண்ணுக்கும், அவரது நுரையீரல்கள் 58 வயது பெண் ஒருவருக்கும், கல்லீரல் 25 வயது ஆண் ஒருவருக்கும், அவரது சிறுநீரகங்கள், முறையே 58 மற்றும் 39 வயதுடைய ஆண்கள் இருவருக்கும் பொருத்தப்பட்டுள்ளன. ஆக, இறந்தும் 5 பேரை வாழவைத்துள்ளார் Lucy.
இந்நிலையில், ஐந்து ஆண்டுகளாக கடுமையான இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டிருந்த Lital என்ற பெண்ணுக்கு Lucyயின் இதயம் பொருத்தப்பட்டதால் மறுவாழ்வு பெற்றுள்ளார் அவர்.
Credit: Jotam Confino/The Jewish News
தனக்குக் கிடைத்த இதயம் யாருடையது என்பது குறித்து பின்னர் அறிந்து நெகிழ்ந்துபோன Lital, சமீபத்தில் Lucyயின் மற்ற இரண்டு மகள்களான Keren மற்றும் Tali ஆகியோரை சந்தித்தார்.
Credit: Jotam Confino/The Jewish News
தன் மார்பில் இதயத்துடிப்பை அறியும் ஸ்டெதஸ்கோப் என்னும் கருவியின் ஒரு முனையை Lital வைத்துக்கொள்ள, Kerenம் Taliயும் ஸ்டெதஸ்கோப்பின் மறுமுனையை காதில் வைத்து தங்கள் தாயின் இதயத் துடிப்பைக் கேட்டனர்.
தாயின் இதயத் துடிப்பை மீண்டும் கேட்டு பிள்ளைகள் கண்ணீர் விட, இரண்டு பிள்ளைகளுக்குத் தாயான Lital, அவர்களுடைய கன்னத்தில் வழியும் கண்ணீரைத் துடைக்கும் நெகிழவைக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன.