200 கிராம் தங்க கட்டிகள்.., மாமியார் பிறந்தநாளுக்கு ரூ.1 கோடி மதிப்பில் பரிசுப்பொருட்கள் வழங்கிய மருமகள்
மாமியாரின் பிறந்தநாளுக்கு ரூ.1 கோடி மதிப்பில் மருமகள் பரிசுப்பொருட்கள் வழங்கிய சம்பவம் நெகிழ வைத்துள்ளது.
ரூ.1 கோடிக்கு பரிசு
இந்திய மாநிலமான ஆந்திரப்பிரதேசம், கோதாவரி மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியினர் சுகேஷ் மற்றும் ஸ்ரீரங்கநாயகி. இவர்கள் திருமணத்திற்கு பிறகு கணவர் குடும்பத்தினருடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்நிலையில், சுகேஷின் தாயார் பவானிக்கு 50 -வது பிறந்த நாள் வந்துள்ளது. இந்த பிறந்தநாள் விழாவை மிக பிரம்மாண்டமாக கொண்டாட வேண்டும் என்று மருமகள் ஸ்ரீரங்கநாயகி நினைத்துள்ளார்.
இதற்காக உறவினர்களை அழைத்து விழா நடத்தியுள்ளார். அப்போது, வீட்டுக்குள் மாமியார் வரும்போது பூக்கள் தூவி வரவேற்றுள்ளார். அதன்பிறகு, மாமியாரை மேடையில் ஏற்றி கேக் வெட்ட வைத்துள்ளார்.
இதன் பிறகு, 50-வது பிறந்தநாளை கொண்டாடும் மாமியாருக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பரிசுகளைக் கொடுத்து அசத்தியிருக்கிறார்.
100 கிராம் எடைகொண்ட இரு தங்கக் கட்டிகள், 50 லட்சத்து 50 ஆயிரத்து 50 ரூபாய் ரொக்க பணம், 28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நெக்லஸ், விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் என்று ரூ.1 கோடி மதிப்பில் பரிசுகளை வழங்கியுள்ளார். இதனால், மாமியார் இன்ப அதிர்ச்சி ஆகியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |