பணிப்பெண்ணை சித்ரவதை செய்த எம்.எல்.ஏ மருமகள்.., வழக்கு பதிவு செய்த பொலிஸார்
சென்னையில் வீட்டுவேலைக்கு சென்ற இளம்பெண்ணை அடித்து துன்புறுத்திய எம்எல்ஏ மகன் ஆண்டோ, மருமகள் மர்லினா மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
வழக்குப்பதிவு செய்த பொலிஸார்
சென்னை திருவான்மியூரில் உள்ள எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் வீட்டிற்கு, ஒப்பந்த அடிப்படையில் இளம்பெண் ஒருவர் வேலைக்கு சென்றுள்ளார்.
அங்கு அப்பெண் பல்வேறு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். தலை முடியை வெட்டுவது, சூடுவைப்பது, மிரட்டுவது போன்ற பல இன்னல்களுக்கு ஆளானார்.
தற்போது அவர் ஊடகத்திடம் தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை கூறியதன் மூலம் இந்த விடயம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வேலைக்கு வந்த பெண்ணின் முடியை வெட்டி, மிளகாய் கரைச்சல் குடிக்க வைத்த எம்.எல்.ஏ மருமகள்! கொந்தளித்த சீமான்
இந்த விடயம் குறித்து திமுக எம்.எல்.ஏ கருணாநிதி ''இந்த விடயத்திற்கும் எனக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது, திருமணத்திற்கு பிறகு கடந்த 7 ஆண்டுகள் என் மகனும், மருமகளும் தனியாகத்தான் வசித்து வருகிறார்கள்'' என விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், இவ்வழக்கு குறித்து எம்எல்ஏ மகன் ஆண்டோ, மருமகள் மர்லினா மீது நீலாங்கரை அனைத்து மகளிர் பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |