அரசு வேலைக்காக தாய் கொன்ற 23 வயது மகள்: சிசிடிவியில் சிக்கிய கூலிப்படை
ஜெய்ப்பூரில் சொத்து மற்றும் அரசு பணிக்காக சொந்த தாயை மகள் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசு வேலைக்காக தாயை கொன்ற மகள்
கடந்த ஜூலை 3ம் திகதி ஜெய்ப்பூரில் பிரதாப் நகரில் தன்னுடைய மகனை பயிற்சி மையத்தில் இறக்கி விட்டுவிட்டு நீரஜ் சர்மா(45 வயது) வீடு திரும்பி கொண்டிருந்த போது வேகமாக வந்த ஸ்கார்பியோ கார் அவர் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட நீரஜ் சர்மா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
ஆரம்பத்தில் இந்த சம்பவம் விபத்தாக கருதப்பட்டாலும், சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொலிஸார் இந்த சம்பவத்தை திட்டமிட்ட படுகொலை என்பதை உறுதிப்படுத்தினர்.

ஜேர்மனியில் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: 16 வயது இளைஞரை ஹெலிகாப்டரில் துரத்திப்பிடித்த பொலிஸார்
சொந்த மகள் செய்த சதி வேலை
நீரஜ் சர்மாவின் கணவர் இறந்த பிறகு அவரது அரசு வேலை அவரது மனைவியான நீரஜ் சர்மாவுக்கு கிடைத்தது.
அந்த வேலை தனக்கு கிடைக்க வேண்டும் என்று அப்போதே அவரது 23 வயது மகள் ஆயுஷி சர்மா விரும்பியுள்ளார்.
இதனிடையே சமீபத்தில் தாய் நீரஜ் சர்மாவிற்கும், மகள் ஆயுஷி சர்மாவுக்கும் இடையே சொத்து தகராறும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், தாயுடன் ஏற்பட்ட சொத்து தகராறு மற்றும் அரசு வேலையை அவரிடம் இருந்து பறிக்கும் நோக்கில், தனது மாமா மோகன் ஸ்வரூப் மற்றும் உறவினர் பல்ராம் (எ) ரவி ஆகியோருடன் இணைந்து தாயை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
மேலும் இதற்காக ஹேமந்த சர்மா என்ற நபருக்கு 7 லட்சம் ரூபாய் வழங்கி கூலிப்படை அமைத்து கொலை செய்துள்ளார்.
கைது நடவடிக்கை
குற்றம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, மகள் ஆயுஷி, மோகன் ஸ்வரூப், மோகித் சர்மா உட்பட 7 பேரை பொலிஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இந்த சதித் திட்டத்தின் முக்கிய நபரான பல்ராம் என்ற நபரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |