ரூ 7,000 கோடி மதிப்பு நிறுவனம்... பெரும் கோடீஸ்வரரின் ஒரே வாரிசு: யாரிந்த ஜெயந்தி
இந்தியாவில் பெரும் கோடீஸ்வரர்கள் பலர் தற்போது தங்கள் பிள்ளைகளிடம் பொறுப்புகளை ஒப்படைத்து வருவதுடன், அவர்களும் பொறுப்புணர்ந்து செயல்பட்டு வெற்றியடைகின்றனர்.
24 வயதிலிருந்தே
அப்படியான ஒருவர்தான் ஜெயந்தி சவுகான். மிகப் பிரபலமான Bisleri நிறுவன உரிமையாளரான ரமேஷ் சவுகானின் மகள். ஜெயந்தி தற்போது துணைத் தலைவியாக Bisleri நிறுவனத்தை வழிநடத்துகிறார்.
தனது 24 வயதிலிருந்தே பிஸ்லேரியின் ஒரு பகுதியாக செயல்பட்டுள்ளார். ரமேஷ் சவுகானின் ரூ 7,000 கோடி வணிக சாம்ராஜியத்திற்கு ஒரே வாரிசு ஜெயந்தி என்றே கூறப்படுகிறது.
அவர் தனது தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் செயல்பட்டு வருவதுடன் நிறுவனத்தின் டெல்லி அலுவலகத்தை தமது பொறுப்பில் எடுத்துக்கொண்டுள்ளார். பிஸ்லேரி நிறுவனம் ஒட்டுமொத்த இந்தியாவிலும் நன்கு அறிமுகமான பிராண்டாக இருந்தாலும், ஜெயந்தியால் அது அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளதாகவே கூறுகின்றனர்.
லண்டன் பல்கலைக்கழகத்தில்
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் FIDM கல்லூரியில் பட்டம் பெற்றவர் ஜெயந்தி. மிலானோவில் உள்ள புகழ்பெற்ற இஸ்ட்டிடுடோ மரங்கோனியில் ஃபேஷன் ஸ்டைலிங்க் முடித்துள்ளார்.
லண்டன் பல்கலைக்கழகத்தில் SOAS படிப்பில் பட்டம் பெற்றுள்ளார். அத்துடன் லண்டன் காலேஜ் ஆஃப் ஃபேஷன் கல்லூரியில் ஃபேஷன் ஸ்டைலிங் மற்றும் போட்டோகிராஃபியில் பட்டம் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |